• Nov 25 2024

வடக்கில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு - வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அறிவிப்பு...!samugammedia

Anaath / Dec 15th 2023, 7:46 pm
image

வடக்கில் கடந்த 12 மாத  காலப்பகுதியில் 3100 நபர்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் எற்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் பற்றிய ஊடகவியாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. 

குறித்த சந்திப்பின் போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் 2600 நோயாளர்களும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏனைய நோயாளிகளும் இனங்காணப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரத்தில் 02 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்டவர். மற்றையவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவராவார்.

கோப்பாய், சண்டிலிப்பாய், யாழ்பபாணம், நல்லூர், பருத்தித்துறை, கரவெட்டி, ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தாங்கள் சார்ந்த பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க எண்ண வேண்டும். அப்படி நோய் எற்படுகின்ற ஒருவருக்கு தகுதிவாய்ந்த வைத்தியரை நாடுவது சாலச்சிறந்தது.

வட மாகாணத்தில்  டெங்கு நுளம்பு தொடர்பான முறைப்பாடுகள் ஆலோசனைகள் தாக்க தொடர்பான விபரங்கள் பற்றிய அறிந்துகொள்ளவும், தெரிவிக்கவும். அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (0761799901) இவை 24 மணித்தியாயல சேவையாக காணப்படுவதுடன், முறைப்பாடுகளை வட்சப் மூலம் வடமாகாண சுகாதார திணைக்களத்திற்கு அறிவிக்கமுடியும் - எந அவர் தெரிவித்துள்ளார்.

 குறித்த  ஊடக சந்திப்பில் வடமாகாண சமூதாய மருத்துவர் ஆலோசகர் ஜீ. ரஜீபன், வட மாகாண பொதுசுகாதார நோய் தடுப்பு இணைப்பாளர் வைத்தியர் ஏ.திலீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு - வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அறிவிப்பு.samugammedia வடக்கில் கடந்த 12 மாத  காலப்பகுதியில் 3100 நபர்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் எற்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் பற்றிய ஊடகவியாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் 2600 நோயாளர்களும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏனைய நோயாளிகளும் இனங்காணப்பட்டனர்.யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரத்தில் 02 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்டவர். மற்றையவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவராவார்.கோப்பாய், சண்டிலிப்பாய், யாழ்பபாணம், நல்லூர், பருத்தித்துறை, கரவெட்டி, ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.எனவே பொதுமக்கள் தாங்கள் சார்ந்த பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க எண்ண வேண்டும். அப்படி நோய் எற்படுகின்ற ஒருவருக்கு தகுதிவாய்ந்த வைத்தியரை நாடுவது சாலச்சிறந்தது.வட மாகாணத்தில்  டெங்கு நுளம்பு தொடர்பான முறைப்பாடுகள் ஆலோசனைகள் தாக்க தொடர்பான விபரங்கள் பற்றிய அறிந்துகொள்ளவும், தெரிவிக்கவும். அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (0761799901) இவை 24 மணித்தியாயல சேவையாக காணப்படுவதுடன், முறைப்பாடுகளை வட்சப் மூலம் வடமாகாண சுகாதார திணைக்களத்திற்கு அறிவிக்கமுடியும் - எந அவர் தெரிவித்துள்ளார். குறித்த  ஊடக சந்திப்பில் வடமாகாண சமூதாய மருத்துவர் ஆலோசகர் ஜீ. ரஜீபன், வட மாகாண பொதுசுகாதார நோய் தடுப்பு இணைப்பாளர் வைத்தியர் ஏ.திலீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement