தமிழகத்தில் இலங்கை படகு ஒன்றை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழை பகுதியில், நடுக்கடலில் இலங்கை பைபா் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் நேற்று (07) மிதந்துள்ளது.
அப்பகுதிச் சென்ற மீனவா்கள், அந்த படகை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனா். 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அந்த படகில், இலங்கை அரசின் முத்திரை காணப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்த தகவலின் பேரில் தட்டாா்மடம் பொலிஸார் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் அதிகாரிகள் அந்த படகை ஆய்வு செய்தனா்.
இந்த படகு சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நடுக்கடலில் மிதந்த இலங்கை படகால் பதற்றம் - இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்பு தமிழகத்தில் இலங்கை படகு ஒன்றை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழை பகுதியில், நடுக்கடலில் இலங்கை பைபா் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் நேற்று (07) மிதந்துள்ளது. அப்பகுதிச் சென்ற மீனவா்கள், அந்த படகை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனா். 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அந்த படகில், இலங்கை அரசின் முத்திரை காணப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த தகவலின் பேரில் தட்டாா்மடம் பொலிஸார் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் அதிகாரிகள் அந்த படகை ஆய்வு செய்தனா். இந்த படகு சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.