• May 04 2024

திருமலையில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி- அப்துல்லா மகரூப் கவலை!

Sharmi / Dec 2nd 2022, 7:58 pm
image

Advertisement

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மகரூப் இன்று வெள்ளிக்கிழமை (02) மாலை தோப்பூர் பிரதேசத்திற்கு வருகைதந்து மேற்கொள்ளப்படவுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பாக விளக்கமளித்து கலந்துரையாடினார்.

இதில் கட்சியின் தோப்பூர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

மேற்கொள்ளப்படவுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பாக எமக்கு பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்கனவே செய்யப்பட்ட எல்லை நிர்ணயத்தில் முஸ்லீம், தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தில் குறைந்த அளவில் உள்ள பெரும்பான்மை சகோதர்களே நன்மையடைந்தனர்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எல்லை நிர்ணயத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசார அடிப்படையில்  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பாக திருகோணமலையில் இந்துக் கலாச்சார மண்டபத்தில் தமிழ் கட்சிகளோடு பேசினேன்.இது ஊடகங்களில் ஒளிபரப்பாயிருந்தது.

இதனை பார்த்துவிட்டு திருகோணமலை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவரது கட்சித் தலைவரோடு சேர்ந்து மஹிந்த தேசப் பிரியவை சந்தித்து பேசியதாக கேள்விப்பட்டேன்.அவரிடம் எழுத்து மூலமான எந்தவித ஆவணங்களும் கிடையாது ,எல்லாமே ஏமாற்றுத்தனம் எனவும் தெரிவித்தார்.



திருமலையில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி- அப்துல்லா மகரூப் கவலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மகரூப் இன்று வெள்ளிக்கிழமை (02) மாலை தோப்பூர் பிரதேசத்திற்கு வருகைதந்து மேற்கொள்ளப்படவுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பாக விளக்கமளித்து கலந்துரையாடினார்.இதில் கட்சியின் தோப்பூர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.மேற்கொள்ளப்படவுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பாக எமக்கு பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்கனவே செய்யப்பட்ட எல்லை நிர்ணயத்தில் முஸ்லீம், தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தில் குறைந்த அளவில் உள்ள பெரும்பான்மை சகோதர்களே நன்மையடைந்தனர்.எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எல்லை நிர்ணயத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசார அடிப்படையில்  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பாக திருகோணமலையில் இந்துக் கலாச்சார மண்டபத்தில் தமிழ் கட்சிகளோடு பேசினேன்.இது ஊடகங்களில் ஒளிபரப்பாயிருந்தது.இதனை பார்த்துவிட்டு திருகோணமலை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவரது கட்சித் தலைவரோடு சேர்ந்து மஹிந்த தேசப் பிரியவை சந்தித்து பேசியதாக கேள்விப்பட்டேன்.அவரிடம் எழுத்து மூலமான எந்தவித ஆவணங்களும் கிடையாது ,எல்லாமே ஏமாற்றுத்தனம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement