• May 18 2024

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் முரண்பாடா? சபையில் எதிர்க்கட்சி கேள்வி samugammedia

Chithra / Jul 5th 2023, 2:39 pm
image

Advertisement

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு எதிராகவே சபாநாயகரின்  நடவடிக்கை அமைந்துள்ளது. அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருக்கிறதா என எதிர்க்கடசி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் புதன்கிழமை (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது.

அதில்,  பாராளுமன்ற குழுக்களில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி பிரதமகொறடா,  சபை முதல்வர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோருக்கு வழகங்கப்பட்டிருக்கும் விரப்பிரசாதங்களுக்கு அமைய அதன் தலைவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் அந்த குழுக்களுக்கு செல்வது யோக்கியம் இல்லை என தெரிவித்தார்.

இதன்போது லக்ஷ்மன கிரியெல்ல எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். 

அதன் பிரகாரமே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார் அதற்கு அரச நிதிக்குழுவின் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உங்களது தீர்மானத்தின் பிரகாரம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதியின்  அழைப்புக்கு முரணாகவே அமைந்துள்ளது. 

அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்குமிடையில் மோதல் ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்ககளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார்.

ஆனால் தற்போது அந்த நடவடிக்கையை நிறுத்தும் வகையில் நீங்கள் செயற்படுவதாக இருந்தால், நீங்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுபவராக இருக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், எனது அறிவிப்பில் அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அறிக்கையை முறையாக வாசித்து பாருங்கள் என்றார்.

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் முரண்பாடா சபையில் எதிர்க்கட்சி கேள்வி samugammedia நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு எதிராகவே சபாநாயகரின்  நடவடிக்கை அமைந்துள்ளது. அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருக்கிறதா என எதிர்க்கடசி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.பாராளுமன்றம் புதன்கிழமை (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது.அதில்,  பாராளுமன்ற குழுக்களில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி பிரதமகொறடா,  சபை முதல்வர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோருக்கு வழகங்கப்பட்டிருக்கும் விரப்பிரசாதங்களுக்கு அமைய அதன் தலைவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் அந்த குழுக்களுக்கு செல்வது யோக்கியம் இல்லை என தெரிவித்தார்.இதன்போது லக்ஷ்மன கிரியெல்ல எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன் பிரகாரமே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார் அதற்கு அரச நிதிக்குழுவின் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உங்களது தீர்மானத்தின் பிரகாரம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதியின்  அழைப்புக்கு முரணாகவே அமைந்துள்ளது. அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்குமிடையில் மோதல் ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்ககளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார்.ஆனால் தற்போது அந்த நடவடிக்கையை நிறுத்தும் வகையில் நீங்கள் செயற்படுவதாக இருந்தால், நீங்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுபவராக இருக்க வேண்டும் என்றார்.அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், எனது அறிவிப்பில் அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அறிக்கையை முறையாக வாசித்து பாருங்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement