• May 04 2024

சுகாதார சேவையை கையில் எடுக்கும் கொட்டகலை பிரதேச சபை!

crownson / Dec 13th 2022, 6:58 am
image

Advertisement

தோட்டப்புற மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சனைகள் பற்றியும் நிறை குறைந்த பிள்ளைகள் பற்றியும் அக்கறை கொண்டு 12.12.2022 அன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையின் கீழ்,  கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் திரு. விக்ரமசிங்க மற்றும் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் சுதர்ஷன், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் திரு தசநாயக்க, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள்,  குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று கொட்டகலை பிரதேச சபையில் நடைபெற்றது. 

இதன்போது,  கொட்டகலை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட தோட்டப்புறங்களின் வைத்திய நிலையங்களை புனரமைத்தல், அவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளல், போசணைக் குறைபாடுடைய பிள்ளைகளுக்கான புரத உணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

இனிவரும் காலங்களில் எமது தோட்டப்புற மக்கள் சுகாதாரம் சார்ந்த எந்த பிரச்சனைகளிலும் பாதிக்கப்படக் கூடாது.

அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரதேச சபை தலைவர் உறுதிமொழி அளித்துள்ளார்.

சுகாதார சேவையை கையில் எடுக்கும் கொட்டகலை பிரதேச சபை தோட்டப்புற மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சனைகள் பற்றியும் நிறை குறைந்த பிள்ளைகள் பற்றியும் அக்கறை கொண்டு 12.12.2022 அன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையின் கீழ்,  கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் திரு. விக்ரமசிங்க மற்றும் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் சுதர்ஷன், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் திரு தசநாயக்க, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள்,  குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று கொட்டகலை பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போது,  கொட்டகலை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட தோட்டப்புறங்களின் வைத்திய நிலையங்களை புனரமைத்தல், அவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளல், போசணைக் குறைபாடுடைய பிள்ளைகளுக்கான புரத உணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இனிவரும் காலங்களில் எமது தோட்டப்புற மக்கள் சுகாதாரம் சார்ந்த எந்த பிரச்சனைகளிலும் பாதிக்கப்படக் கூடாது. அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரதேச சபை தலைவர் உறுதிமொழி அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement