• May 05 2024

மதுபானத்தால் பெருந்தொகை வருமானத்தை இழந்துள்ள அரசாங்கம்..! - அமைச்சர் தகவல்

Chithra / Dec 13th 2022, 6:58 am
image

Advertisement

மதுபான போத்தல்களில் ஒட்டும் பாதுகாப்பு ஸ்டிக்கர் வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 60 பில்லியன் ரூபா வருடாந்த வருமானம் இழப்பு ஏற்படுவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு பாதுகாப்பு ஸ்டிக்கர் அம்சம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், கலால் திணைக்களம் வருடாந்தம் 40 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது.


இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர் வேலைத்திட்டம் போலியான பொருட்களை அடையாளம் காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகள் நிறைந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின காரணமாக அரசுக்கு 60 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், 

ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு உரிய டெண்டரை வழங்கிய பிரபல நிறுவனம், உலகின் மூன்று நாடுகளில் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு இந்த டெண்டரை வழங்கியமைக்கு நிதி மற்றும் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மதுபானத்தால் பெருந்தொகை வருமானத்தை இழந்துள்ள அரசாங்கம். - அமைச்சர் தகவல் மதுபான போத்தல்களில் ஒட்டும் பாதுகாப்பு ஸ்டிக்கர் வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 60 பில்லியன் ரூபா வருடாந்த வருமானம் இழப்பு ஏற்படுவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2017ஆம் ஆண்டு பாதுகாப்பு ஸ்டிக்கர் அம்சம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், கலால் திணைக்களம் வருடாந்தம் 40 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது.இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர் வேலைத்திட்டம் போலியான பொருட்களை அடையாளம் காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகள் நிறைந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.இத்திட்டத்தின காரணமாக அரசுக்கு 60 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு உரிய டெண்டரை வழங்கிய பிரபல நிறுவனம், உலகின் மூன்று நாடுகளில் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு இந்த டெண்டரை வழங்கியமைக்கு நிதி மற்றும் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement