• May 05 2024

காணி மோசடி வழக்கு-சட்டத்தரணிக்கு பிணை கோரி விண்ணப்பம் !

Sharmi / Jan 6th 2023, 9:50 am
image

Advertisement

காணி மோசடி வழக்கில் மேலும் 3 நொத்தாரிசுகளிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

மோசடி உறுதி வழக்கில் விளக்கமறியலில் உள்ள சட்டத்தரணிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளதோடு மேலும் மூன்று நொத்தாரிசுகளின் பெயரை பொலிசார் மன்றுறைத்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விளக்க மறியலில் உள்ள சட்டத்தரணிக்கு பிணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. 

இதனை ஆட்சேபித்த பொலிசார் மேலும் 3 நொத்தாரிசுகளிடமும் காணி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளது.  அதனால் இந்த நொத்தாரிசின் பிணையை வழங்க முடியாது என ஆட்சேபணை தெரிவித்ததோடு  மேலும் வாக்குமூலம் பெற வேண்டிய நொத்தாரிசுகளின் பெயரில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட மூவரின் பெயரை மன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி மோசடி வழக்கு-சட்டத்தரணிக்கு பிணை கோரி விண்ணப்பம் காணி மோசடி வழக்கில் மேலும் 3 நொத்தாரிசுகளிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.மோசடி உறுதி வழக்கில் விளக்கமறியலில் உள்ள சட்டத்தரணிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளதோடு மேலும் மூன்று நொத்தாரிசுகளின் பெயரை பொலிசார் மன்றுறைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது விளக்க மறியலில் உள்ள சட்டத்தரணிக்கு பிணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனை ஆட்சேபித்த பொலிசார் மேலும் 3 நொத்தாரிசுகளிடமும் காணி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளது.  அதனால் இந்த நொத்தாரிசின் பிணையை வழங்க முடியாது என ஆட்சேபணை தெரிவித்ததோடு  மேலும் வாக்குமூலம் பெற வேண்டிய நொத்தாரிசுகளின் பெயரில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட மூவரின் பெயரை மன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement