• Apr 15 2025

கட்டுநாயக்கவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை இடைநிறுத்தம்

Chithra / Aug 20th 2024, 10:24 am
image

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பேருந்து சேவை கடந்த 15ஆம் திகதி தொடங்கப்பட்ட நிலையில், அதற்கெதிராக அன்றே போராட்டங்களும் நடைபெற்றன.

குறிப்பாக கோட்டை தனியார் சொகுசு பேருந்து சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சேவையை புறக்கணிக்க ஆரம்பித்தது.

கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சாரதிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு 04 நாட்களுக்கு பின்னர் சொகுசு பேருந்து சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட சொகுசு பேருந்துகளுக்கு பதிலாக 10 பேருந்துகள் விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை இயக்கப்படும் என விமான நிலைய தனியார் சொகுசு பேருந்து சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை இடைநிறுத்தம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்த சொகுசு பேருந்து சேவை கடந்த 15ஆம் திகதி தொடங்கப்பட்ட நிலையில், அதற்கெதிராக அன்றே போராட்டங்களும் நடைபெற்றன.குறிப்பாக கோட்டை தனியார் சொகுசு பேருந்து சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சேவையை புறக்கணிக்க ஆரம்பித்தது.கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சாரதிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதனை கருத்திற்கொண்டு 04 நாட்களுக்கு பின்னர் சொகுசு பேருந்து சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நிறுத்தப்பட்ட சொகுசு பேருந்துகளுக்கு பதிலாக 10 பேருந்துகள் விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை இயக்கப்படும் என விமான நிலைய தனியார் சொகுசு பேருந்து சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now