• Nov 26 2024

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேல நியமனம்..!

Sharmi / Oct 14th 2024, 9:56 am
image

ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (‍IPL) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) ஐ.பி.எல் 2025 க்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

மஹேல ஜெயவர்தன 2017 முதல் 2022 வரையிலான காலக் கட்டத்தில் மும்பை அணியின் வரலாற்றில் இதேபோன்ற பங்களிப்பை கொண்டிருந்தார்.

அவர் அவர்களின் 2017, 2019 மற்றும் 2020-21 பட்டம் வென்ற அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக இருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சருக்குப் பதிலாக மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் 2023 ஐபிஎல் சீசனில் நாக் அவுட்களுக்கு தகுதி பெற்றது, ஆனால் இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 14 போட்டிகளில் நான்கில் மாத்திரம் வெற்று பெற்று இறுதி இடத்துக்கு சென்றது.

2024 ஐபிஎல் சீசனில் ரோஹித் ஷர்மாவை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியது மற்றும் அந்த பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தமையினால் மும்பை அணி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இதனால்,  இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா சமூக ஊடகங்களில் ட்ரோல்களை எதிர்கொண்டார் மற்றும் அணி விளையாடிய ஒவ்வொரு மைதானத்திலும் அவர் ரசிகர்களிடையே கடும் அதிருப்திக்கு உள்ளானார்.

இந்த நிலையில் 2025 ஐ.பி.எல் க்கு முன்னதாக, ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸை விட்டு வெளியேறுவது குறித்தும் ஊகங்கள் எழுந்துள்ளன.

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேல நியமனம். ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (‍IPL) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) ஐ.பி.எல் 2025 க்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.மஹேல ஜெயவர்தன 2017 முதல் 2022 வரையிலான காலக் கட்டத்தில் மும்பை அணியின் வரலாற்றில் இதேபோன்ற பங்களிப்பை கொண்டிருந்தார்.அவர் அவர்களின் 2017, 2019 மற்றும் 2020-21 பட்டம் வென்ற அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார்.இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக இருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சருக்குப் பதிலாக மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.மும்பை இந்தியன்ஸ் 2023 ஐபிஎல் சீசனில் நாக் அவுட்களுக்கு தகுதி பெற்றது, ஆனால் இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 14 போட்டிகளில் நான்கில் மாத்திரம் வெற்று பெற்று இறுதி இடத்துக்கு சென்றது.2024 ஐபிஎல் சீசனில் ரோஹித் ஷர்மாவை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியது மற்றும் அந்த பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தமையினால் மும்பை அணி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.இதனால்,  இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா சமூக ஊடகங்களில் ட்ரோல்களை எதிர்கொண்டார் மற்றும் அணி விளையாடிய ஒவ்வொரு மைதானத்திலும் அவர் ரசிகர்களிடையே கடும் அதிருப்திக்கு உள்ளானார்.இந்த நிலையில் 2025 ஐ.பி.எல் க்கு முன்னதாக, ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸை விட்டு வெளியேறுவது குறித்தும் ஊகங்கள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement