• Nov 27 2024

மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள வற் வரி - கருத்து தெரிவிக்காமல் நழுவிய மஹிந்த..!

Chithra / Jan 6th 2024, 8:34 am
image

 

நாட்டில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள வற் வரி குறித்து கருத்து வெளியிடுவதில் சிக்கல்கள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சரியான நேரத்தில் முன்வைக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை. தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாகவும் மகிந்த கூறினார்.

எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களுக்கும் தமது கட்சி தயாராக உள்ளது. 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சியும் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள வற் வரி - கருத்து தெரிவிக்காமல் நழுவிய மஹிந்த.  நாட்டில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள வற் வரி குறித்து கருத்து வெளியிடுவதில் சிக்கல்கள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சரியான நேரத்தில் முன்வைக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.அந்த பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை. தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாகவும் மகிந்த கூறினார்.எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களுக்கும் தமது கட்சி தயாராக உள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சியும் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement