• May 05 2024

யாழ் மாநகர முதல்வராக மீண்டும் மணிவண்ணன்?

Sharmi / Jan 10th 2023, 9:46 am
image

Advertisement

யாழ் மாநகர முதல்வர் பதவியை விஸ்வலிங்கம் மணிவண்ணன் இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய முதல்வர் தொடர்பில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ள யாழ் மாநகர மேயர்  தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்டை  மீண்டும்  களமிறக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மறுபுறம் முன்னாள் மேயர் மணிவண்ணனும் மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் மேயர் மணிவண்ணனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்  கட்சியான ரெலோ மற்றும் புளொட் ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவரும் நிலையில் மீண்டும்  மாநகர மணிவண்ணன் தெரிவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை மணிவண்ணன் மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவாராக இருந்தால் ஈ.பி.டி.பி மற்றும் சுதந்திரக் கட்சி என்பன மீண்டும்  ஆதரவளிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் எதிர்வரும்19ம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் மணிவண்ணன் மற்றும் ஆனோல்ட் போட்டியிடுவார்களா அல்லது வேறொரு முதல்வர் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா? என்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் தெரியவரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


யாழ் மாநகர முதல்வராக மீண்டும் மணிவண்ணன் யாழ் மாநகர முதல்வர் பதவியை விஸ்வலிங்கம் மணிவண்ணன் இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய முதல்வர் தொடர்பில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ள யாழ் மாநகர மேயர்  தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்டை  மீண்டும்  களமிறக்கவுள்ளதாக தெரியவருகின்றது.மறுபுறம் முன்னாள் மேயர் மணிவண்ணனும் மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் முன்னாள் மேயர் மணிவண்ணனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்  கட்சியான ரெலோ மற்றும் புளொட் ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவரும் நிலையில் மீண்டும்  மாநகர மணிவண்ணன் தெரிவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.அதேவேளை மணிவண்ணன் மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவாராக இருந்தால் ஈ.பி.டி.பி மற்றும் சுதந்திரக் கட்சி என்பன மீண்டும்  ஆதரவளிக்க வாய்ப்புள்ளது.இந்நிலையில் எதிர்வரும்19ம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் மணிவண்ணன் மற்றும் ஆனோல்ட் போட்டியிடுவார்களா அல்லது வேறொரு முதல்வர் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா என்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் தெரியவரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement