இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நகரில் இன்று (19) நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதால் புனித நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறும் கூடாரத்திற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தை அடுத்து பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தினால் உண்டான சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.
உத்தரபிரதேசில் மகா கும்பமேளா நிகழ்வில் பாரிய தீ விபத்து இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நகரில் இன்று (19) நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதால் புனித நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறும் கூடாரத்திற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ விபத்தை அடுத்து பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்தினால் உண்டான சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.