• May 04 2024

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்..!உயிர் பிழைக்க புகலிடத்தை நாடிய தாயும் மகளும்..!மூடியிருந்த கதவால் நேர்ந்த சோகம்....! samugammedia

Sharmi / Jun 3rd 2023, 1:34 pm
image

Advertisement

உக்ரைன் - ரஷ்யா போரானது ஓராண்டுகளை கடந்து நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட போரில் புகலிடம் ஒன்றில் நுழைய முயற்சித்த தாயும், மகளும் மற்றும் ஒரு பெண்ணும்  உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில்,  நேற்று முன்தினம் இரவு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் வானிலையே இடைமறித்து அழித்துள்ளது.

இருப்பினும் அந்த ஏவுகணைகளின் உடைந்த சில பாகங்கள் பொதுமக்கள் மீது விழுந்து சிலர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளது.

குறித்த தாக்குதலின் போது தப்பிப்பதற்காக சிலர் புகலிடம் ஒன்றில் நுழைவதற்கு முயற்சித்துள்ளனர்.

ஆயினும், அந்த கட்டிடம் பூட்டி இருந்தமையால் அவர்கள் தப்பி கொள்வதற்கு வழியின்றி அதில் ஒன்பது வயது சிறுமியும் அவருடைய தாயும் மற்றும் 33 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து  கீவ் நகர மேயர்,

வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கையின் போது இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு அதில் வெடிகுண்டு புகலிடங்கள் திறந்து இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, உக்ரைனின் உள்துறை மந்திரி கிளிமிங்கோ,போரின் போது வெடிகுண்டு புகலிடங்கள் மூடியிருப்பது என்பது அலட்சியமாகும் என்பதுடன் அது ஒரு குற்றச்செயல் என்றும் கூறியுள்ளார்.


உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்.உயிர் பிழைக்க புகலிடத்தை நாடிய தாயும் மகளும்.மூடியிருந்த கதவால் நேர்ந்த சோகம். samugammedia உக்ரைன் - ரஷ்யா போரானது ஓராண்டுகளை கடந்து நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட போரில் புகலிடம் ஒன்றில் நுழைய முயற்சித்த தாயும், மகளும் மற்றும் ஒரு பெண்ணும்  உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில்,  நேற்று முன்தினம் இரவு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் வானிலையே இடைமறித்து அழித்துள்ளது. இருப்பினும் அந்த ஏவுகணைகளின் உடைந்த சில பாகங்கள் பொதுமக்கள் மீது விழுந்து சிலர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளது. குறித்த தாக்குதலின் போது தப்பிப்பதற்காக சிலர் புகலிடம் ஒன்றில் நுழைவதற்கு முயற்சித்துள்ளனர். ஆயினும், அந்த கட்டிடம் பூட்டி இருந்தமையால் அவர்கள் தப்பி கொள்வதற்கு வழியின்றி அதில் ஒன்பது வயது சிறுமியும் அவருடைய தாயும் மற்றும் 33 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  கீவ் நகர மேயர், வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கையின் போது இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு அதில் வெடிகுண்டு புகலிடங்கள் திறந்து இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, உக்ரைனின் உள்துறை மந்திரி கிளிமிங்கோ,போரின் போது வெடிகுண்டு புகலிடங்கள் மூடியிருப்பது என்பது அலட்சியமாகும் என்பதுடன் அது ஒரு குற்றச்செயல் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement