இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36,552 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அந்தவகையில், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அங்கு 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சுகாதார வைத்திய அதிகாரியின் 29 பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு 29 பிரிவுகளிலும் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு. இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36,552 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அந்தவகையில், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அங்கு 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை, சுகாதார வைத்திய அதிகாரியின் 29 பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.இதன்படி, எதிர்வரும் 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு 29 பிரிவுகளிலும் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார்.