• Feb 06 2025

மியன்மாரிலுள்ள 18 இலங்கையர்களை மீட்க அவசர உதவியை கோரிய அரசு

Chithra / Feb 5th 2025, 9:14 am
image

 

இலங்கை பிரஜைகளை மீட்பது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது  தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், மியான்மர் துணைப் பிரதமர் உ தான் ஸ்வேவுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

மியன்மாரிலுள்ள இணையதள மோசடி மையங்களில் சிக்கியுள்ள 18 இலங்கை பிரஜைகளை விரைவாக மீட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியான்மர் அரசாங்கத்தின் அவசர உதவியை அமைச்சர் இதன் போது கோரியுள்ளார்.

2022 மற்றும் 2024 க்கு இடையில், மியான்மார் 91 இலங்கையர்களை மீட்டு திருப்பி அனுப்ப உதவியது. 

மியாவாடியில் கடத்தல் கும்பல்களால் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாகக் கூறப்படும் மீதமுள்ள 18 இலங்கையர்களை உடனடியாக மீட்டு திருப்பி அனுப்புவதற்கு மியான்மரின் அவசர ஒத்துழைப்பை அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

 

மியன்மாரிலுள்ள 18 இலங்கையர்களை மீட்க அவசர உதவியை கோரிய அரசு  இலங்கை பிரஜைகளை மீட்பது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது  தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், மியான்மர் துணைப் பிரதமர் உ தான் ஸ்வேவுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.மியன்மாரிலுள்ள இணையதள மோசடி மையங்களில் சிக்கியுள்ள 18 இலங்கை பிரஜைகளை விரைவாக மீட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியான்மர் அரசாங்கத்தின் அவசர உதவியை அமைச்சர் இதன் போது கோரியுள்ளார்.2022 மற்றும் 2024 க்கு இடையில், மியான்மார் 91 இலங்கையர்களை மீட்டு திருப்பி அனுப்ப உதவியது. மியாவாடியில் கடத்தல் கும்பல்களால் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாகக் கூறப்படும் மீதமுள்ள 18 இலங்கையர்களை உடனடியாக மீட்டு திருப்பி அனுப்புவதற்கு மியான்மரின் அவசர ஒத்துழைப்பை அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement