• May 18 2024

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக நஸ்மியா சனூஸ்...!samugammedia

Sharmi / Aug 25th 2023, 3:18 pm
image

Advertisement

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/ கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை) புதிய அதிபராக  இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி நஸ்மியா சனூஸ் கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டு இன்று (25) தனது கடமைகளை வலயக் கல்வி பணிப்பாளர் சஹ்துல் நஜீம் முன்னிலையில் பொறுப்பேற்றார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் கல்முனை வலய உதவி கல்வி பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்து மிகத் திறம்பட செயலாற்றிய நிலையில்  அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்வு பாடசாலையில்போது, தனது கடமைகளை பொறுப்பேற்ற அதிபர் திருமதி நஸ்மியா சனூஸ் அங்கு உரையாற்றும் போது,

தமது தாய்ப் பாடசாலையான மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று அதிபராக பொறுப்பேற்றுள்ள நான்,
அமானிதமாக கொண்டு
எனது கடமைகளை மிகச் சிறப்பாக  செய்து எமது பிரதேசத்தில் மிகச் சிறப்பான ஒரு பாடசாலையாக மேலும் வளர்ச்சி காண உழைப்பேன்.அத்துடன் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபடுவேன்.

எங்கு எனது நியமனத்துக்காக அரும்பாடு பட்ட அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எமது பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி அனைவரும் ஒன்றிணைந்து இந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு கைகோர்க்க வேண்டும்  வேண்டுகோளை விடுக்கிறேன் என்றார்.

இங்கு வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர்  ஹபீபுள்ளாஹ் உட்பட வலயக் கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அதிபரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக நஸ்மியா சனூஸ்.samugammedia கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/ கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை) புதிய அதிபராக  இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி நஸ்மியா சனூஸ் கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டு இன்று (25) தனது கடமைகளை வலயக் கல்வி பணிப்பாளர் சஹ்துல் நஜீம் முன்னிலையில் பொறுப்பேற்றார்.இலங்கை கல்வி நிர்வாக சேவையில் கல்முனை வலய உதவி கல்வி பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்து மிகத் திறம்பட செயலாற்றிய நிலையில்  அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிகழ்வு பாடசாலையில்போது, தனது கடமைகளை பொறுப்பேற்ற அதிபர் திருமதி நஸ்மியா சனூஸ் அங்கு உரையாற்றும் போது,தமது தாய்ப் பாடசாலையான மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று அதிபராக பொறுப்பேற்றுள்ள நான்,அமானிதமாக கொண்டுஎனது கடமைகளை மிகச் சிறப்பாக  செய்து எமது பிரதேசத்தில் மிகச் சிறப்பான ஒரு பாடசாலையாக மேலும் வளர்ச்சி காண உழைப்பேன்.அத்துடன் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபடுவேன்.எங்கு எனது நியமனத்துக்காக அரும்பாடு பட்ட அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எமது பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி அனைவரும் ஒன்றிணைந்து இந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு கைகோர்க்க வேண்டும்  வேண்டுகோளை விடுக்கிறேன் என்றார்.இங்கு வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர்  ஹபீபுள்ளாஹ் உட்பட வலயக் கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அதிபரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement