• May 18 2024

யாழ்.கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் samugammedia

Chithra / Aug 25th 2023, 3:34 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதைக் கழித்துள்ளனர்.

அதன்போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடிய பிரஜைகள் எனவும், ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்.கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் samugammedia  யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதைக் கழித்துள்ளனர்.அதன்போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடிய பிரஜைகள் எனவும், ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement