• May 18 2024

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்! samugammedia

Tamil nila / Apr 28th 2023, 6:25 pm
image

Advertisement

கனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இணைய வழியிலான சமூக ஊடக  நிறுவனங்களிடமிருந்து கட்டணம் அளவிடும் ஓர் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை காலமும் மரபு ரீதியான ஒலி ஒளிபரப்பு சேவைகளிடமிருந்து இந்தக் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது. 

இந்தக் கட்டணங்கள் இணைய வழி ஊடகங்களுக்கு பொருத்தப்பாடு உடையதாக இருக்கவில்லை.எனினும் தற்பொழுது லிபரல் அரசாங்கம் இணைய வழியிலான ஊடகங்களிடமிருந்தும் பணம் அளவீடு செய்யும் ஓர் புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சட்டம் Bill C-11 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையிலானது என கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. facebook, டிக் டாக், கூகுள், நெட்பிலிக்ஸ், spotify, youtube போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு இந்த புதிய சட்டம் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் கனடிய அரசாங்கத்தின் சட்டத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.இந்த நிறுவனங்கள் கனடாவில் உழைக்கும் மொத்த வருமானத்தில் 30% கனடிய உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் செலவிட வேண்டும் என புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூகுள் யூடியூப் போன்ற நிறுவனங்கள் கனடிய அரசாங்கத்தின் இந்த சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள நிலையில் ஏனைய பிரதான இணைய நிறுவனங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன.

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம் samugammedia கனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இணைய வழியிலான சமூக ஊடக  நிறுவனங்களிடமிருந்து கட்டணம் அளவிடும் ஓர் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இதுவரை காலமும் மரபு ரீதியான ஒலி ஒளிபரப்பு சேவைகளிடமிருந்து இந்தக் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது. இந்தக் கட்டணங்கள் இணைய வழி ஊடகங்களுக்கு பொருத்தப்பாடு உடையதாக இருக்கவில்லை.எனினும் தற்பொழுது லிபரல் அரசாங்கம் இணைய வழியிலான ஊடகங்களிடமிருந்தும் பணம் அளவீடு செய்யும் ஓர் புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த சட்டம் Bill C-11 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையிலானது என கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. facebook, டிக் டாக், கூகுள், நெட்பிலிக்ஸ், spotify, youtube போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு இந்த புதிய சட்டம் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த நிறுவனங்கள் கனடிய அரசாங்கத்தின் சட்டத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.இந்த நிறுவனங்கள் கனடாவில் உழைக்கும் மொத்த வருமானத்தில் 30% கனடிய உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் செலவிட வேண்டும் என புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கூகுள் யூடியூப் போன்ற நிறுவனங்கள் கனடிய அரசாங்கத்தின் இந்த சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள நிலையில் ஏனைய பிரதான இணைய நிறுவனங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement