• May 06 2024

கேரளாவில் தீவிரமாக பரவும் நிபா வைரஸ் - இரண்டு பேர் உயிரிழப்பு ! samugammedia

Tamil nila / Sep 14th 2023, 9:24 pm
image

Advertisement

இந்தியாவில்  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சலால் பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30ஆம் திகதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13ஆம் திகதியும் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்கள் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

முதலில் பலியான நபரின் குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அந்த நபரின் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனர் உள்ளிட்டோரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் அந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து, அவர்களது தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநில சுகாதரத்துறையினர் சேகரித்தனர். குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர்.

கேரளாவில் தீவிரமாக பரவும் நிபா வைரஸ் - இரண்டு பேர் உயிரிழப்பு samugammedia இந்தியாவில்  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சலால் பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30ஆம் திகதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13ஆம் திகதியும் உயிரிழந்தனர்.அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்கள் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது.முதலில் பலியான நபரின் குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அந்த நபரின் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனர் உள்ளிட்டோரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் அந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து, அவர்களது தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநில சுகாதரத்துறையினர் சேகரித்தனர். குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement