• May 06 2024

சிங்கப்பூர் சந்தைகளில் வட மாகாண விவசாய உற்பத்திகள்- ஆளுநர் நடவடிக்கை!

Sharmi / Jan 26th 2023, 2:52 pm
image

Advertisement

வடக்கு மாகாண விவசாய உற்பத்தி பொருட்களை சிங்கப்பூரில் சந்தைப்படுத்துவது தொடர்பில் சிங்கப்பூர் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி நாட்டின் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

 ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய முதலீடுகள் தொடர்பில்  இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் உயர்மட்ட குழுவினருடன் ஏற்கனவே சந்திப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக வடக்கில் சுகாதாரம்,  விவசாயம் ஆகிய துறைகளை ஊக்குவிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கின் விவசாய உற்பத்திகளை சிங்கப்பூர் நாட்டில் சந்தைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை சிங்கப்பூர் சிரேஷ்ர அமைச்சரான தர்மன் சண்முகரத்தினத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்த்ஸ்னிகரின் உதவியை பெற்றுக் கொண்டு முன்னோக்கி நகர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் சந்தைகளில் வட மாகாண விவசாய உற்பத்திகள்- ஆளுநர் நடவடிக்கை வடக்கு மாகாண விவசாய உற்பத்தி பொருட்களை சிங்கப்பூரில் சந்தைப்படுத்துவது தொடர்பில் சிங்கப்பூர் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி நாட்டின் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய முதலீடுகள் தொடர்பில்  இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் உயர்மட்ட குழுவினருடன் ஏற்கனவே சந்திப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.அதன் தொடர்ச்சியாக வடக்கில் சுகாதாரம்,  விவசாயம் ஆகிய துறைகளை ஊக்குவிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கின் விவசாய உற்பத்திகளை சிங்கப்பூர் நாட்டில் சந்தைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை சிங்கப்பூர் சிரேஷ்ர அமைச்சரான தர்மன் சண்முகரத்தினத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்த்ஸ்னிகரின் உதவியை பெற்றுக் கொண்டு முன்னோக்கி நகர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement