• May 05 2024

புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்...! சந்திரசேகரன்...!samugammedia

Sharmi / Nov 23rd 2023, 1:40 pm
image

Advertisement

புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்தார் .

இன்று யாழ்  அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2022 ம் ஆண்டு இலங்கை வரலாற்றிலேயே துர்ப்பாக்கிய நிலையாக அமைந்தது 69 லட்சம் வாக்குகளை பெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி  சகல அதிகாரங்களையும் தம்வசப்படுத்தி கொண்ட பாராளுமன்றத்தில் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ச மாத்திரமல்லாது ராஜபக்சாக்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

அவர்களுடைய நாய்க்குட்டியாக இருந்த நரி குட்டி ஒன்று ஆட்சி பீடத்துக்கு வந்தது இந்த நரி நரித்தனமான நடவடிக்கைகளிலேயே கடந்த 45 வருடமாக ஈடுபடுகின்றது எனினும் அந்த நரியினை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் சக்தியினர்  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டினுடைய தேசிய பிரச்சினை என்பது 75 வருடங்களாக இருக்கின்ற பிரச்சனை  யார்  என்று  பார்த்தால் நாட்டினுடைய ஆட்சியாளர்கள் அதாவது கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் கட்சிகள் உடந்தையாக இருந்திருக்கின்றார்கள் ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி  நாட்டில் ஆட்சி செய்யவில்லை .

இவ்வாறான  பிரச்சனைகளுக்கு  தமிழ் மக்கள் தீர்வினை எதிர்பார்க்கின்றார்கள்  தலைநிமிர்ந்து தன்மானம் உள்ள தமிழனாக வாழ வேண்டும் என்ற தேவை தமிழ் மக்களுக்குள்ளது.

 அதற்காக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்திலும் ஈடுபட்டிருந்தார்கள் யுத்தம் தோல்வி  அடைந்திருக்கின்றது ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்  போராட்டங்களும் தோல்வி அடைந்திருக்கின்றது நாங்களும் இரண்டு தடவைகள் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் அந்தப் போராட்டத்தில்  தோல்வியடைந்தோம்.

எங்களுடைய பத்தாயிரத்துக்கும் அதிகமான எமதுஇளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

13 வது திருத்த ச்சட்டம் என்பது  தமிழ் மக்களுடைய பிரச்சனை தமிழ் மக்களுக்கு 13  அல்லது தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு நிலைமையினை உருவாக்க முடியும் என்பதில்  தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது .

ஏனென்றால் இந்த நாட்டில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒரு குடையின் கீழ் அணி திரளா விட்டால் அவர்கள் ஒன்று சேர முடியாவிட்டால் இந்த நாட்டில் விமோசனம் இல்லை என்ற கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் தொடர்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார்.


 இந்த பிரச்சனைக்கு நீண்டு நிலைக்கு கூடியவாறு தமிழ் சிங்கள முஸ்லிம்கள் உள்ளிட்ட  அனைத்து இன மக்களின் கருத்துக்களும் ஒன்று சேர்ந்து புதிய அரசியலமைப்பு  உருவாக்கப்படும்


மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு 45 வருடங்களாகும் ஆனால்  பிரச்சினை அதே இடத்தில்ததான்  இருக்கின்றது இருந்த போதிலும் கூட தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் இந்த மாகாண சபை என்பது 13-வது திருத்த ச்சட்டம்  என்பது தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழ் மக்களுக்கென வழங்கப்பட்ட தீர்வு என அதனால் மக்கள் சக்தியாகிய நாங்கள் கூறுகின்றோம் 


முதலில் நீண்டு  நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வுக்காக  புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும்  வரைக்கும் இந்த மாகாண சபையினை தொடர்ந்து பேண வேண்டும் என்பது எமது நிலைப் பாடாகும்என்றார்


புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம். சந்திரசேகரன்.samugammedia புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்தார் .இன்று யாழ்  அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2022 ம் ஆண்டு இலங்கை வரலாற்றிலேயே துர்ப்பாக்கிய நிலையாக அமைந்தது 69 லட்சம் வாக்குகளை பெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி  சகல அதிகாரங்களையும் தம்வசப்படுத்தி கொண்ட பாராளுமன்றத்தில் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மாத்திரமல்லாது ராஜபக்சாக்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.அவர்களுடைய நாய்க்குட்டியாக இருந்த நரி குட்டி ஒன்று ஆட்சி பீடத்துக்கு வந்தது இந்த நரி நரித்தனமான நடவடிக்கைகளிலேயே கடந்த 45 வருடமாக ஈடுபடுகின்றது எனினும் அந்த நரியினை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் சக்தியினர்  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.நாட்டினுடைய தேசிய பிரச்சினை என்பது 75 வருடங்களாக இருக்கின்ற பிரச்சனை  யார்  என்று  பார்த்தால் நாட்டினுடைய ஆட்சியாளர்கள் அதாவது கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் கட்சிகள் உடந்தையாக இருந்திருக்கின்றார்கள் ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி  நாட்டில் ஆட்சி செய்யவில்லை .இவ்வாறான  பிரச்சனைகளுக்கு  தமிழ் மக்கள் தீர்வினை எதிர்பார்க்கின்றார்கள்  தலைநிமிர்ந்து தன்மானம் உள்ள தமிழனாக வாழ வேண்டும் என்ற தேவை தமிழ் மக்களுக்குள்ளது. அதற்காக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்திலும் ஈடுபட்டிருந்தார்கள் யுத்தம் தோல்வி  அடைந்திருக்கின்றது ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்  போராட்டங்களும் தோல்வி அடைந்திருக்கின்றது நாங்களும் இரண்டு தடவைகள் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் அந்தப் போராட்டத்தில்  தோல்வியடைந்தோம்.எங்களுடைய பத்தாயிரத்துக்கும் அதிகமான எமதுஇளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.13 வது திருத்த ச்சட்டம் என்பது  தமிழ் மக்களுடைய பிரச்சனை தமிழ் மக்களுக்கு 13  அல்லது தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு நிலைமையினை உருவாக்க முடியும் என்பதில்  தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது .ஏனென்றால் இந்த நாட்டில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒரு குடையின் கீழ் அணி திரளா விட்டால் அவர்கள் ஒன்று சேர முடியாவிட்டால் இந்த நாட்டில் விமோசனம் இல்லை என்ற கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் தொடர்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த பிரச்சனைக்கு நீண்டு நிலைக்கு கூடியவாறு தமிழ் சிங்கள முஸ்லிம்கள் உள்ளிட்ட  அனைத்து இன மக்களின் கருத்துக்களும் ஒன்று சேர்ந்து புதிய அரசியலமைப்பு  உருவாக்கப்படும்மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு 45 வருடங்களாகும் ஆனால்  பிரச்சினை அதே இடத்தில்ததான்  இருக்கின்றது இருந்த போதிலும் கூட தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் இந்த மாகாண சபை என்பது 13-வது திருத்த ச்சட்டம்  என்பது தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழ் மக்களுக்கென வழங்கப்பட்ட தீர்வு என அதனால் மக்கள் சக்தியாகிய நாங்கள் கூறுகின்றோம் முதலில் நீண்டு  நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வுக்காக  புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும்  வரைக்கும் இந்த மாகாண சபையினை தொடர்ந்து பேண வேண்டும் என்பது எமது நிலைப் பாடாகும்என்றார்

Advertisement

Advertisement

Advertisement