• May 18 2024

இலங்கையில் முடங்கும் வைத்தியசாலைகள் - 20000 மருத்துவர்கள் போராட்டத்தில் குதிப்பு

harsha / Dec 16th 2022, 5:25 pm
image

Advertisement

அரசின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ,ஊடகத் துறை உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

அரசு பல்வேறு வரிக் கொள்கைகளை அறிமுகம் செய்துள்ளது.அடுத்த வருடம் முதல் இந்த வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இந்த வரிக் கொள்கையின் சாதக பாதக விடயங்களை நாம் இன்று கூடி ஆராய்ந்தோம்.ஆகவே இந்த பொருத்தம் அற்ற வரிக் கொள்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இன்றைய மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரிக் கொள்கைக்கு எதிராக மக்களை விழிப்பூட்டுதல்,பல்வேறு தொழில் சங்கங்களை அழைத்து இது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,மற்றும் எமது சங்கத்தின்  20 ஆயிரம் மருத்துவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இலங்கையில் முடங்கும் வைத்தியசாலைகள் - 20000 மருத்துவர்கள் போராட்டத்தில் குதிப்பு அரசின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ,ஊடகத் துறை உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:அரசு பல்வேறு வரிக் கொள்கைகளை அறிமுகம் செய்துள்ளது.அடுத்த வருடம் முதல் இந்த வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இந்த வரிக் கொள்கையின் சாதக பாதக விடயங்களை நாம் இன்று கூடி ஆராய்ந்தோம்.ஆகவே இந்த பொருத்தம் அற்ற வரிக் கொள்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இன்றைய மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரிக் கொள்கைக்கு எதிராக மக்களை விழிப்பூட்டுதல்,பல்வேறு தொழில் சங்கங்களை அழைத்து இது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,மற்றும் எமது சங்கத்தின்  20 ஆயிரம் மருத்துவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement