• May 18 2024

கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்- பாகிஸ்தானில் அவல நிலை!

Tamil nila / Jan 11th 2023, 2:45 pm
image

Advertisement

பாகிஸ்தானில், சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.


 பாகிஸ்தானில் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர் கொள்கின்றனர். நாட்டின் சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. கைபர் பன்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கோதுமை மாவை பெற மக்கள் முண்டியடித்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. 


சந்தையில் ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், மானிய விலையில் கிடைக்கும் மாவு மூட்டைகளைப் பெற ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் தினமும் மணிக்கணக்கில் செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 10 கிலோ மாவு பையை பெற  மக்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதைக் காட்டும் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.


ஆயுதமேந்திய காவலர்களால் பாதுகாக்கப்பட்ட மினி லாரிகள் மற்றும் வேன்கள் மாவை விநியோகிக்கச் செல்லும் நிலையில், மக்கள் மாவைப் பெற வாகனங்களைச் சுற்றி கூடுவதால் கடும் நெரிசலும் சண்டையும் ஏற்படும் காட்சிகள் அடிக்கடி காணப்படுகின்றன. 



பாகிஸ்தான் அரசு மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல் பாகிஸ்தானில் கோதுமை நெருக்கடிக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் உணவுத் துறையால் எவ்வளவு கோதுமை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை சரியாக மதிப்பிட முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் கோதுமை மாவின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன என்று  செய்திகள் தெரிவிக்கின்றன.


 

கராச்சியில், மாவு ஒரு கிலோ ரூ.140 முதல் ஒரு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது. இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில், 10 கிலோ மாவு ரூ.1,500 க்கும், 20 கிலோ மாவு மூட்டை ரூ.2,800 க்கும் விற்கப்படுகிறது.


பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஆலை உரிமையாளர்கள் மாவின் விலையை ஒரு கிலோ ரூ .160 ஆக உயர்த்தியுள்ளனர். இதே போல், கைபர் பக்துன்க்வாவில் 20 கிலோகிராம் மாவு ஒரு பை ரூ .3100 க்கு விற்கப்படுவதால், இதுவரை இல்லாத அளவிற்கு மாவு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று கூறப்படுகிறது.


பலுசிஸ்தான் உணவு அமைச்சர் ஜமரக் அச்சக்சாய், மாகாணத்தில் கோதுமை இருப்பு "முற்றிலுமாக  தீர்ந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானுக்கு உடனடியாக 400,000 மூட்டை கோதுமை தேவை என்று கூறிய அவர், இல்லையெனில், நெருக்கடி தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்தார்.


மேலும், தந்தூரி ரொட்டியின் விலையையும் உயர்த்தியுள்ளதால், கைபர் பக்துன்க்வாவில் நிலைமை மக்களை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. ரொட்டி தவிர, அனைத்து பேக்கரி பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.


கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன, மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி நிலவுகிறது.

கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்- பாகிஸ்தானில் அவல நிலை பாகிஸ்தானில், சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானில் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர் கொள்கின்றனர். நாட்டின் சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. கைபர் பன்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கோதுமை மாவை பெற மக்கள் முண்டியடித்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. சந்தையில் ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், மானிய விலையில் கிடைக்கும் மாவு மூட்டைகளைப் பெற ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் தினமும் மணிக்கணக்கில் செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 10 கிலோ மாவு பையை பெற  மக்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதைக் காட்டும் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.ஆயுதமேந்திய காவலர்களால் பாதுகாக்கப்பட்ட மினி லாரிகள் மற்றும் வேன்கள் மாவை விநியோகிக்கச் செல்லும் நிலையில், மக்கள் மாவைப் பெற வாகனங்களைச் சுற்றி கூடுவதால் கடும் நெரிசலும் சண்டையும் ஏற்படும் காட்சிகள் அடிக்கடி காணப்படுகின்றன. பாகிஸ்தான் அரசு மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல் பாகிஸ்தானில் கோதுமை நெருக்கடிக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் உணவுத் துறையால் எவ்வளவு கோதுமை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை சரியாக மதிப்பிட முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் கோதுமை மாவின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன என்று  செய்திகள் தெரிவிக்கின்றன. கராச்சியில், மாவு ஒரு கிலோ ரூ.140 முதல் ஒரு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது. இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில், 10 கிலோ மாவு ரூ.1,500 க்கும், 20 கிலோ மாவு மூட்டை ரூ.2,800 க்கும் விற்கப்படுகிறது.பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஆலை உரிமையாளர்கள் மாவின் விலையை ஒரு கிலோ ரூ .160 ஆக உயர்த்தியுள்ளனர். இதே போல், கைபர் பக்துன்க்வாவில் 20 கிலோகிராம் மாவு ஒரு பை ரூ .3100 க்கு விற்கப்படுவதால், இதுவரை இல்லாத அளவிற்கு மாவு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று கூறப்படுகிறது.பலுசிஸ்தான் உணவு அமைச்சர் ஜமரக் அச்சக்சாய், மாகாணத்தில் கோதுமை இருப்பு "முற்றிலுமாக  தீர்ந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானுக்கு உடனடியாக 400,000 மூட்டை கோதுமை தேவை என்று கூறிய அவர், இல்லையெனில், நெருக்கடி தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்தார்.மேலும், தந்தூரி ரொட்டியின் விலையையும் உயர்த்தியுள்ளதால், கைபர் பக்துன்க்வாவில் நிலைமை மக்களை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. ரொட்டி தவிர, அனைத்து பேக்கரி பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன, மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி நிலவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement