• May 05 2024

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்..! ஆனால் தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா! - சபையில் எம்.பி வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Nov 23rd 2023, 2:27 pm
image

Advertisement

 

நாட்டில் இன்று அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது, ஆனால் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒரு ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முறைகேடான நடவடிக்கைகள் காரணமாகவே எமது நாடு சீரழிந்தது. அரச ஊழியர் ஒருவர் சேவையில் இருந்து விலகினால் அவருக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. 

ஆனால் தற்போது நாட்டின் ஜனாதிபதி தப்பிச்சென்றார்.  அவருக்கு வருடத்துக்கு 3கோடி கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

சேவையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருக்கு ஏன் 3 கோடி வழங்க வேண்டும்? அரச சேவையில் இருந்து தப்பிச்செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய செயற்படாமல், தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி வருகிறது.

இந்த அரசாங்கம் தேர்தலுக்கு பயம். தேர்தலுக்கு அச்சப்படும் அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் உதவி கிடைக்கப்போவதில்லை.

அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல். ஆனால் தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் எம்.பி வெளியிட்ட தகவல் samugammedia  நாட்டில் இன்று அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது, ஆனால் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒரு ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முறைகேடான நடவடிக்கைகள் காரணமாகவே எமது நாடு சீரழிந்தது. அரச ஊழியர் ஒருவர் சேவையில் இருந்து விலகினால் அவருக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. ஆனால் தற்போது நாட்டின் ஜனாதிபதி தப்பிச்சென்றார்.  அவருக்கு வருடத்துக்கு 3கோடி கொடுப்பனவு வழங்கப்படுகிறது.சேவையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருக்கு ஏன் 3 கோடி வழங்க வேண்டும் அரச சேவையில் இருந்து தப்பிச்செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய செயற்படாமல், தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி வருகிறது.இந்த அரசாங்கம் தேர்தலுக்கு பயம். தேர்தலுக்கு அச்சப்படும் அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் உதவி கிடைக்கப்போவதில்லை.அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement