முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நேற்று (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருந்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள
இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 15ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும், 16ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், மறுநாள் 17ஆம் திகதி இரவு 09.00 மணிக்கு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
18 ஆம் திகதி காலை 8 மணிக்கு தேர்த் திருவிழாவும், 19 ஆம் திகதி காலை 8 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.
மேலும் 20 ஆம் திகதி பூங்காவனமும் 21 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் மகோற்சவம் நிறைவுக்கு வரும்.
இக்கொடியேற்றத் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினார்கள்.
புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்ற உற்சவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நேற்று (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருந்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளஇந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 15ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும், 16ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், மறுநாள் 17ஆம் திகதி இரவு 09.00 மணிக்கு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.18 ஆம் திகதி காலை 8 மணிக்கு தேர்த் திருவிழாவும், 19 ஆம் திகதி காலை 8 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.மேலும் 20 ஆம் திகதி பூங்காவனமும் 21 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் மகோற்சவம் நிறைவுக்கு வரும்.இக்கொடியேற்றத் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினார்கள்.