• May 18 2024

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி சட்டவிரோதமானது – யாழ்.பொலிசார் 07 பேருக்கு அழைப்பாணை.!

Sharmi / Feb 8th 2023, 2:34 pm
image

Advertisement

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி என்ற பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்து கொண்டமைக்காக பொலிசாரினால் அழைப்பாணை ஒன்று அனுப்பட்டுள்ளது.

இன்று சிவகுரு ஆதீனத்தில் வைத்து இந்த அழைப்பாணை யாழ்ப்பாண பொலிஸ் தலையகத்தால் வழங்கப்பட்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தவத்திரு வேலன் சுவாமிகளின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக பொலிசாரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் உடையில் வருகை வருகைதந்த பொலிசாரே அழைப்பாணையை வழங்கினர். வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி சட்டவிரோதமானது – யாழ்.பொலிசார் 07 பேருக்கு அழைப்பாணை. வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி என்ற பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்து கொண்டமைக்காக பொலிசாரினால் அழைப்பாணை ஒன்று அனுப்பட்டுள்ளது.இன்று சிவகுரு ஆதீனத்தில் வைத்து இந்த அழைப்பாணை யாழ்ப்பாண பொலிஸ் தலையகத்தால் வழங்கப்பட்டது.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தவத்திரு வேலன் சுவாமிகளின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக பொலிசாரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சிவில் உடையில் வருகை வருகைதந்த பொலிசாரே அழைப்பாணையை வழங்கினர். வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement