• May 04 2024

பெண் சிறைக் கைதிகளை போரில் களமிறக்கும் ரஷ்யா!

Tamil nila / Feb 7th 2023, 6:43 pm
image

Advertisement

உக்ரைன் போரில் தண்டனை பெற்ற பெண் கைதிகளை ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைனிய அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் இன்னும் சில நாட்களில் ஓராண்டை கடக்க இருக்கும் நிலையில், உக்ரைன் எல்லை பகுதிகளில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 ராணுவ துருப்புகளை மீண்டும் குவித்து இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.  


ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட, உதவியாக டாங்கிகள், ஏவுகணைகள், போர் விமானங்கள் ஆகியவற்றை  உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்க மேற்கத்திய நாடுகளும் முன்வந்துள்ளனர்.இதற்கிடையில் சமீபத்தில் உக்ரைனிய ஆயுதப் படை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து 1,31,290 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய சிறையில் தண்டனை பெற்று வரும் பெண் கைதிகளை ரஷ்யா போரில் களமிறக்கி இருப்பதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.இதற்காக நிஷ்னி என்ற பகுதியில் 50 பெண் கைதிகளை ரஷ்யா களமிறக்கி இருப்பதாகவும், இதைப் போல ரஷ்யாவில் வீடற்றவர்களையும், ராணுவத்தில் போதிய அனுபவம் இல்லாத நபர்களையும் தாக்குதலில் களமிறக்கி இருப்பதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.


மேலும் சமீபத்தில் எஸ் 300 ரக ஏவுகணையால் கார்கிவ் நகரை ரஷ்யா தாக்கி இருப்பதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


பெண் சிறைக் கைதிகளை போரில் களமிறக்கும் ரஷ்யா உக்ரைன் போரில் தண்டனை பெற்ற பெண் கைதிகளை ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைனிய அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் இன்னும் சில நாட்களில் ஓராண்டை கடக்க இருக்கும் நிலையில், உக்ரைன் எல்லை பகுதிகளில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 ராணுவ துருப்புகளை மீண்டும் குவித்து இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.  ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட, உதவியாக டாங்கிகள், ஏவுகணைகள், போர் விமானங்கள் ஆகியவற்றை  உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்க மேற்கத்திய நாடுகளும் முன்வந்துள்ளனர்.இதற்கிடையில் சமீபத்தில் உக்ரைனிய ஆயுதப் படை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து 1,31,290 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய சிறையில் தண்டனை பெற்று வரும் பெண் கைதிகளை ரஷ்யா போரில் களமிறக்கி இருப்பதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.இதற்காக நிஷ்னி என்ற பகுதியில் 50 பெண் கைதிகளை ரஷ்யா களமிறக்கி இருப்பதாகவும், இதைப் போல ரஷ்யாவில் வீடற்றவர்களையும், ராணுவத்தில் போதிய அனுபவம் இல்லாத நபர்களையும் தாக்குதலில் களமிறக்கி இருப்பதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.மேலும் சமீபத்தில் எஸ் 300 ரக ஏவுகணையால் கார்கிவ் நகரை ரஷ்யா தாக்கி இருப்பதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement