• May 18 2024

மருதமுனையில் கடல் கொந்தளிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!

Sharmi / Dec 8th 2022, 7:46 pm
image

Advertisement

வாங்களா விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கரையோர பிரதேசங்களில் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் கடலரிப்பும் பாரிய அளவில் ஏற்பட்டு வருகின்றன.

மருதமுனையில் கடலரிப்பு காரணமாக கரையோர பிரதேசங்களில் வானுயர்ந்து வளர்ந்து நின்று தென்னை மரங்கள் கடலுக்குள் விழ்ந்துள்ளன.  இவ்வாறு தொடர்ந்தும் கடலரிப்பு ஏற்பட்டால் பல மரங்கள் கடலுக்குள் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கரையோர பிரதேசங்களில் தொடர்ந்தும் பலமான காற்று வீசி வருவதுடன் அடை மழையும் பெய்து வருகின்றன. காற்று காரணமாக சில வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன். ஆங்காங்கே மரங்களும் விழுந்துள்ளன.

குளிர் காற்றுடன் கூடிய பனி மூட்டங்கள் வீதிகளை மறைத்த வண்ணம் காணப்படுகின்றன. மீனவர்கள் தமது தோணிகள்இ வலிகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துவதையும் காணக் கூடியதாக உள்ளது.

,

மருதமுனையில் கடல் கொந்தளிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் வாங்களா விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கரையோர பிரதேசங்களில் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் கடலரிப்பும் பாரிய அளவில் ஏற்பட்டு வருகின்றன.மருதமுனையில் கடலரிப்பு காரணமாக கரையோர பிரதேசங்களில் வானுயர்ந்து வளர்ந்து நின்று தென்னை மரங்கள் கடலுக்குள் விழ்ந்துள்ளன.  இவ்வாறு தொடர்ந்தும் கடலரிப்பு ஏற்பட்டால் பல மரங்கள் கடலுக்குள் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.இதேவேளை கரையோர பிரதேசங்களில் தொடர்ந்தும் பலமான காற்று வீசி வருவதுடன் அடை மழையும் பெய்து வருகின்றன. காற்று காரணமாக சில வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன். ஆங்காங்கே மரங்களும் விழுந்துள்ளன.குளிர் காற்றுடன் கூடிய பனி மூட்டங்கள் வீதிகளை மறைத்த வண்ணம் காணப்படுகின்றன. மீனவர்கள் தமது தோணிகள்இ வலிகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துவதையும் காணக் கூடியதாக உள்ளது.,

Advertisement

Advertisement

Advertisement