• May 18 2024

தூத்துக்குடியில் இருந்து பட்டப்பகலில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்! samugammedia

Tamil nila / Jul 12th 2023, 4:41 pm
image

Advertisement

தமிழ் நாட்டின் தூத்துக்குடி கடற்ரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தல் முயற்சி பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி - தருவைக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து படகு ஒன்றில் பெருமளவான பொருட்கள் பொதி செய்யப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டு புறப்படும் காணொனி காட்சி வெளியாகியுள்ளது.



கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் படகில் போதைப் பொருளை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பலர் கடலில் நீந்தியவாறு இருக்கையில், அடுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் பொதிகள் படகின் மேற்பரப்பிற்கு மேலாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் படகின் நங்கூரத்தை கடலில் இருந்து அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு படகை இயக்கி புறப்படும் காட்சி குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

அத்துடன், கடலில் நீந்தியவாறு இருப்பவர்களும் படகில் இருந்தவர்களும் காணொளி காட்சி எடுப்பவர்களை மிரட்சியுடன் பார்ப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதேவேளை, குறித்த காணொளி காட்சியில் படகின் பின்னணியில், தமிழ்நாட்டு இழுவைப் படகுகள் வரிசையாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் தமிழ்நாட்டு இழுவைப் படகுகள் மூலம் இலங்கைக்கு கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்படுவதாக கூறப்படும் நிலையில் இக்காணொளி காட்சியில் தமிழ்நாட்டு இழுவைப் படகுகளின் பின்னணியில் போதைப் பொருட்கள் ஏற்றிய படகு புறப்படும் காட்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடியில் இருந்து பட்டப்பகலில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் samugammedia தமிழ் நாட்டின் தூத்துக்குடி கடற்ரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தல் முயற்சி பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி - தருவைக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து படகு ஒன்றில் பெருமளவான பொருட்கள் பொதி செய்யப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டு புறப்படும் காணொனி காட்சி வெளியாகியுள்ளது.கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் படகில் போதைப் பொருளை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பலர் கடலில் நீந்தியவாறு இருக்கையில், அடுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் பொதிகள் படகின் மேற்பரப்பிற்கு மேலாகவே காணப்படுகிறது.இந்நிலையில் படகின் நங்கூரத்தை கடலில் இருந்து அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு படகை இயக்கி புறப்படும் காட்சி குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.அத்துடன், கடலில் நீந்தியவாறு இருப்பவர்களும் படகில் இருந்தவர்களும் காணொளி காட்சி எடுப்பவர்களை மிரட்சியுடன் பார்ப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.இதேவேளை, குறித்த காணொளி காட்சியில் படகின் பின்னணியில், தமிழ்நாட்டு இழுவைப் படகுகள் வரிசையாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் தமிழ்நாட்டு இழுவைப் படகுகள் மூலம் இலங்கைக்கு கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்படுவதாக கூறப்படும் நிலையில் இக்காணொளி காட்சியில் தமிழ்நாட்டு இழுவைப் படகுகளின் பின்னணியில் போதைப் பொருட்கள் ஏற்றிய படகு புறப்படும் காட்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement