• May 06 2024

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி அவசர கடிதம்! samugammedia

Tamil nila / Sep 6th 2023, 5:43 pm
image

Advertisement

இந்தியாவின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் திகதி முதல் 22-ந் திகதி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா காந்தியின் கடிதம், அதானி குழுமத்திற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை, விவசாயிகளின் MSP உயர்வுக்கான கோரிக்கைகள், மணிப்பூர் நிலைமை, வகுப்புவாத பதட்டங்களின் அதிகரிப்பு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அவசியம், சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட ஒன்பது விவகாரங்களில் பாராளுமன்ற விவாதத்தின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது.

பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை இன்னும் வெளியிடாததால், சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவார் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) கூட்டத்தில் முடிவு செய்தது.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, “செப்டம்பர் 18 முதல் ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நீங்கள் கூட்ட உள்ளீர்கள். வேறு எந்த அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்களுக்கு அதன் நோக்கம் பற்றி எந்த யோசனையும் இல்லை.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

சிறப்பு அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய 9 முக்கிய விசயங்களை பட்டியலிட்ட சோனியா காந்தி, “இவை குறித்து விவாதிக்க சட்ட விதிகளின் படி நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என கூறி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி அவசர கடிதம் samugammedia இந்தியாவின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் திகதி முதல் 22-ந் திகதி வரை நடைபெற உள்ளது.நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.சோனியா காந்தியின் கடிதம், அதானி குழுமத்திற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை, விவசாயிகளின் MSP உயர்வுக்கான கோரிக்கைகள், மணிப்பூர் நிலைமை, வகுப்புவாத பதட்டங்களின் அதிகரிப்பு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அவசியம், சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட ஒன்பது விவகாரங்களில் பாராளுமன்ற விவாதத்தின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது.பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை இன்னும் வெளியிடாததால், சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவார் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) கூட்டத்தில் முடிவு செய்தது.அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, “செப்டம்பர் 18 முதல் ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நீங்கள் கூட்ட உள்ளீர்கள். வேறு எந்த அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்களுக்கு அதன் நோக்கம் பற்றி எந்த யோசனையும் இல்லை.” என்று குறிப்பிட்டு உள்ளார்.சிறப்பு அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய 9 முக்கிய விசயங்களை பட்டியலிட்ட சோனியா காந்தி, “இவை குறித்து விவாதிக்க சட்ட விதிகளின் படி நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என கூறி உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement