• May 18 2024

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விசேட அறிவிப்பு! samugammedia

Chithra / Aug 25th 2023, 7:57 pm
image

Advertisement

பாராளுமன்ற செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்பை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விசேட அறிவித்தலை விடுத்தார்.

குறிப்பாக சபை அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும் போது பாராளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய இந்தப் பணிகளை சுயாதீனமாக மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நிறைவேற்றுவதற்கு  சபாநாயகர் அல்லது சபைக்குத் தலைமைதாங்கும் உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கும் அல்லது உதவும் அதிகாரிகள் என்ற ரீதியில் அரசியலமைப்புக்கு அமைய அரசியலமைப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற செயலாளர் குழுவுக்கு, சுயாதீனமாக அல்லது பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதைத் தடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் அமையலாம் என்பதால், இதுபோன்று பாராளுமன்ற செயலாளர் குழுவில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகாரிகள் தொடர்பில் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அவற்றை  சபாநாயகருக்கு சமர்ப்பிக்குமாறும் பிரதி சபாநாயகர் அறிவித்தார்.


ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விசேட அறிவிப்பு samugammedia பாராளுமன்ற செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்பை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விசேட அறிவித்தலை விடுத்தார்.குறிப்பாக சபை அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும் போது பாராளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய இந்தப் பணிகளை சுயாதீனமாக மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நிறைவேற்றுவதற்கு  சபாநாயகர் அல்லது சபைக்குத் தலைமைதாங்கும் உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கும் அல்லது உதவும் அதிகாரிகள் என்ற ரீதியில் அரசியலமைப்புக்கு அமைய அரசியலமைப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற செயலாளர் குழுவுக்கு, சுயாதீனமாக அல்லது பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதைத் தடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் அமையலாம் என்பதால், இதுபோன்று பாராளுமன்ற செயலாளர் குழுவில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், அதிகாரிகள் தொடர்பில் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அவற்றை  சபாநாயகருக்கு சமர்ப்பிக்குமாறும் பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement