• May 18 2024

தட்டுப்பாடின்றி உரங்களை விநியோகிக்க விசேட நடவடிக்கை - விவசாய அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை samugammedia

Chithra / Oct 8th 2023, 1:54 pm
image

Advertisement

21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உர நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் இணைந்து 21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை நாளை (9) முதல் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உரத்தை விவசாய சேவை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியும் எனவும், 50 கிலோ யூரியா உரம் மூட்டை ஒன்றை 9000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் சிலோன் உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.

இந்த பருவத்தில் தட்டுப்பாடு இன்றி உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் தனியார் துறையும் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


தட்டுப்பாடின்றி உரங்களை விநியோகிக்க விசேட நடவடிக்கை - விவசாய அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை samugammedia 21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உர நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் இணைந்து 21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை நாளை (9) முதல் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த உரத்தை விவசாய சேவை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியும் எனவும், 50 கிலோ யூரியா உரம் மூட்டை ஒன்றை 9000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் சிலோன் உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.இந்த பருவத்தில் தட்டுப்பாடு இன்றி உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் தனியார் துறையும் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement