• Mar 11 2025

‘யுக்திய’ சோதனை செய்த வாகனங்களுக்கு சிறப்பு ஸ்டிக்கர்...!

Chithra / Jan 7th 2024, 3:53 pm
image

 

‘யுக்திய’ சோதனை நடவடிக்கையின் போது வாகனங்களின் கண்ணாடியின் இடதுபுறத்தில் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து போதைப் பொருள் கடத்துவதை தடுக்கும் வகையிலும், தேடப்படும் சந்தேக நபர்கள் கொழும்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையிலும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், சோதனை செய்யப்பட்ட வாகனங்களின் கண்ணாடியின் இடதுபுறத்தில் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் அடுத்தடுத்த சோதனைச் சாவடிகளில் கடமையிலுள்ள காவல்துறை அதிகாரிகளினால் சோதனை செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


‘யுக்திய’ சோதனை செய்த வாகனங்களுக்கு சிறப்பு ஸ்டிக்கர்.  ‘யுக்திய’ சோதனை நடவடிக்கையின் போது வாகனங்களின் கண்ணாடியின் இடதுபுறத்தில் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனைத் தெரிவித்தார்.கொழும்பில் இருந்து போதைப் பொருள் கடத்துவதை தடுக்கும் வகையிலும், தேடப்படும் சந்தேக நபர்கள் கொழும்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையிலும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.அத்துடன், சோதனை செய்யப்பட்ட வாகனங்களின் கண்ணாடியின் இடதுபுறத்தில் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதனால் அடுத்தடுத்த சோதனைச் சாவடிகளில் கடமையிலுள்ள காவல்துறை அதிகாரிகளினால் சோதனை செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement