• May 05 2024

வங்குரோத்து நிலையை நோக்கி பயணிக்கும் இலங்கை...! தொழிற் சங்கங்களின் போராட்டம் நியாயமானது...! சிறீதரன் எம்.பி...!samugammedia

Sharmi / Oct 28th 2023, 10:54 pm
image

Advertisement

இலங்கையில் பல்வேறு தொழிற் சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டங்கள் அடக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இலங்கையில் நடைபெறும் தொழிற்சங்க போராட்டங்கள் உண்மையானது. அவர்கள் மிகவும் வறுமை நிலையில் வாடுகின்றார்கள். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு நேரம் அல்லது ஒரு நேரம் மட்டும் உணவை உண்டு வாழும் மக்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக நலிவுற்று இருக்கின்றது. அனைத்து பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கும் அரசாங்கம் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை அதிகரிக்கவில்லை. தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தவில்லை.

மக்கள் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் தெருவிலே நிற்கின்றனர். கிட்டத்தட்ட 6000ற்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் வேலையற்ற நிலையில் வீட்டில் நிற்கின்றார்கள்.

இவையெல்லாம் இந்த நாடு வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அதேவேளை தேர்தல்கள் என்பது ஜனநாயக முறையாக கடைப்பிடிக்கவேண்டிய காரியம். அந்த ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதற்கு இப்போதிருக்கின்ற அரசு விரும்பவில்லை என்பது மிக தெளிவாக தெரிகின்றது.

தேர்தல் மீதோ அல்லது மக்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் பயணங்கள் மீதோ இந்த அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருப்பதாக எமக்கு தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையை நோக்கி பயணிக்கும் இலங்கை. தொழிற் சங்கங்களின் போராட்டம் நியாயமானது. சிறீதரன் எம்.பி.samugammedia இலங்கையில் பல்வேறு தொழிற் சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.நாட்டில் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டங்கள் அடக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது இலங்கையில் நடைபெறும் தொழிற்சங்க போராட்டங்கள் உண்மையானது. அவர்கள் மிகவும் வறுமை நிலையில் வாடுகின்றார்கள். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு நேரம் அல்லது ஒரு நேரம் மட்டும் உணவை உண்டு வாழும் மக்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.இந்த நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக நலிவுற்று இருக்கின்றது. அனைத்து பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கும் அரசாங்கம் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை அதிகரிக்கவில்லை. தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தவில்லை.மக்கள் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் தெருவிலே நிற்கின்றனர். கிட்டத்தட்ட 6000ற்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் வேலையற்ற நிலையில் வீட்டில் நிற்கின்றார்கள்.இவையெல்லாம் இந்த நாடு வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அதேவேளை தேர்தல்கள் என்பது ஜனநாயக முறையாக கடைப்பிடிக்கவேண்டிய காரியம். அந்த ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதற்கு இப்போதிருக்கின்ற அரசு விரும்பவில்லை என்பது மிக தெளிவாக தெரிகின்றது.தேர்தல் மீதோ அல்லது மக்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் பயணங்கள் மீதோ இந்த அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருப்பதாக எமக்கு தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement