• Jan 19 2025

ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்று பல கொடுமைகளை அனுபவித்த இலங்கை தமிழ்ப் பெண்

Chithra / Jan 17th 2025, 7:32 am
image

 

2022ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர்  கடந்த 19.12.2024 அன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஓமான் சென்ற குறித்த பெண் கடந்த 11.01.2025 அன்று திடீரென தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், ஊடகங்கள் வாயிலாக அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளேயே எமது அக்காவை மீட்டுத் தருவதற்கு பேருதவியாக இருந்த ஊடகங்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவித்தனர்

இவ்விடயம் குறித்து உரிய குடும்பத்தினர் நேற்று அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். 

வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் ஒருவருட காலத்திற்கான வேதனத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

மற்றைய வருடத்திற்குரிய வேதனம் எதனையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை,

என்னை அடித்து துன்புறுத்தினார்கள், மொட்டை மாடியில் வெயிலில் முழங்காலில் நிற்குமாறு பணித்தார்கள், கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள் இவ்வாறு பல கொடுமைகளை நான் அங்கு அனுபவித்தேன்.

எனவே நான் கடமை புரிந்த மிகுதியாகவுள்ள ஒரு வருடத்திற்குரிய வேதனத்தை எனக்கு பெற்றுத்தர வேண்டும். 

என்னை மீட்டெடுப்பதற்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓமான் நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று அங்கு வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமை புரிந்து பல வேதனைகளை அனுவித்து விட்டு வீடு வந்து சேர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் தெரிவித்துள்ளார். 

ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்று பல கொடுமைகளை அனுபவித்த இலங்கை தமிழ்ப் பெண்  2022ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர்  கடந்த 19.12.2024 அன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இந்நிலையில் ஓமான் சென்ற குறித்த பெண் கடந்த 11.01.2025 அன்று திடீரென தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், ஊடகங்கள் வாயிலாக அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளேயே எமது அக்காவை மீட்டுத் தருவதற்கு பேருதவியாக இருந்த ஊடகங்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவித்தனர் இவ்விடயம் குறித்து உரிய குடும்பத்தினர் நேற்று அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் ஒருவருட காலத்திற்கான வேதனத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.மற்றைய வருடத்திற்குரிய வேதனம் எதனையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை,என்னை அடித்து துன்புறுத்தினார்கள், மொட்டை மாடியில் வெயிலில் முழங்காலில் நிற்குமாறு பணித்தார்கள், கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள் இவ்வாறு பல கொடுமைகளை நான் அங்கு அனுபவித்தேன்.எனவே நான் கடமை புரிந்த மிகுதியாகவுள்ள ஒரு வருடத்திற்குரிய வேதனத்தை எனக்கு பெற்றுத்தர வேண்டும். என்னை மீட்டெடுப்பதற்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓமான் நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று அங்கு வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமை புரிந்து பல வேதனைகளை அனுவித்து விட்டு வீடு வந்து சேர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement