• May 18 2024

உணவு வேளைகளை குறைத்துக்கொண்டுள்ள இலங்கை மக்கள்!

Chithra / Dec 29th 2022, 2:58 pm
image

Advertisement

இலங்கையின் சனத்தொகையில் 76 வீதமானவர்கள் உணவு பாதுகாப்பின்மை காரணமாக உணவு சம்பந்தமாக மாற்று வழிகளை பின்பற்றி வருவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கை உணவு பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான புதிய அறிக்கையில் உலக உணவுத்திட்டம் இதனை கூறியுள்ளது.

இலங்கை மக்கள் தொகையில் 73 வீதமானோர் விலையிலும் போஷாக்கிலும் குறைந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் 52 வீதமானவர்கள் பெற்றுக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர்.


மேலும் 40 வீதமானனோர் உணவு சாப்பிடும் வேளைகளை குறைத்துக்கொண்டுள்ளனர். இலங்கையின் தென் பகுதியே உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் பகுதியில் 48 வீதமானவர்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர சப்ரகமுவை மாகாணத்தில் 45 வீதமானோரும், ஊவா மாகாணத்தில் 43 வீதமானோரும், மத்திய மாகாணத்தில் 36 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.


இதனை தவிர வடமத்திய மாகாணத்தின் சனத்தொகையில் 34 வீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 31 வீதமானோரும் உணவு பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உணவு தொடர்பான பிரச்சினை குறைவாக காணப்படுவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 26 வீதமானோரும் வடக்கு மாகாணத்தில் 25 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் உலக உணவுத்திட்டத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உணவு வேளைகளை குறைத்துக்கொண்டுள்ள இலங்கை மக்கள் இலங்கையின் சனத்தொகையில் 76 வீதமானவர்கள் உணவு பாதுகாப்பின்மை காரணமாக உணவு சம்பந்தமாக மாற்று வழிகளை பின்பற்றி வருவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.இலங்கை உணவு பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான புதிய அறிக்கையில் உலக உணவுத்திட்டம் இதனை கூறியுள்ளது.இலங்கை மக்கள் தொகையில் 73 வீதமானோர் விலையிலும் போஷாக்கிலும் குறைந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் 52 வீதமானவர்கள் பெற்றுக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர்.மேலும் 40 வீதமானனோர் உணவு சாப்பிடும் வேளைகளை குறைத்துக்கொண்டுள்ளனர். இலங்கையின் தென் பகுதியே உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் தென் பகுதியில் 48 வீதமானவர்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர சப்ரகமுவை மாகாணத்தில் 45 வீதமானோரும், ஊவா மாகாணத்தில் 43 வீதமானோரும், மத்திய மாகாணத்தில் 36 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.இதனை தவிர வடமத்திய மாகாணத்தின் சனத்தொகையில் 34 வீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 31 வீதமானோரும் உணவு பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உணவு தொடர்பான பிரச்சினை குறைவாக காணப்படுவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் 26 வீதமானோரும் வடக்கு மாகாணத்தில் 25 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் உலக உணவுத்திட்டத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement