• May 04 2024

இலங்கையின் தொழிற்படையில் முன்னேற்றம் -மத்திய வங்கி அறிவிப்பு!

Tamil nila / Dec 19th 2022, 11:50 am
image

Advertisement

இம்முறை, தொழில் சந்தையில், சிறந்த முன்னேற்றத்தை காணமுடிவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதன்படி, இயங்கும் மக்கள் தொகையான, தொழிற்படை 0.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தொழிற்படையின் எண்ணிக்கை 8.6 மில்லியனாக இருந்த நிலையில், இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் அந்தத் தொகை 8.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.


இந்த ஆண்டில் வேலைவாய்ப்பு 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளில் வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த ஆண்டில் வேலைவாய்ப்பு 8.2 மில்லியனாக பதிவாகியுள்ளது.


மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பாக இயங்காத மக்கள் தொகை இந்த ஆண்டில் குறைந்துள்ளது.


இது ஒரு சிறந்த போக்கு என்று இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.







இலங்கையின் தொழிற்படையில் முன்னேற்றம் -மத்திய வங்கி அறிவிப்பு இம்முறை, தொழில் சந்தையில், சிறந்த முன்னேற்றத்தை காணமுடிவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, இயங்கும் மக்கள் தொகையான, தொழிற்படை 0.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தொழிற்படையின் எண்ணிக்கை 8.6 மில்லியனாக இருந்த நிலையில், இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் அந்தத் தொகை 8.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டில் வேலைவாய்ப்பு 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளில் வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த ஆண்டில் வேலைவாய்ப்பு 8.2 மில்லியனாக பதிவாகியுள்ளது.மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பாக இயங்காத மக்கள் தொகை இந்த ஆண்டில் குறைந்துள்ளது.இது ஒரு சிறந்த போக்கு என்று இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Advertisement

Advertisement

Advertisement