• May 05 2024

சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதனை உடன் நிறுத்துங்கள்...! கடற்றொழிலாளர் சமாசம் தீர்மானம்...!samugammedia

Sharmi / Oct 30th 2023, 5:07 pm
image

Advertisement

சீனாவில் இருந்து  இலங்கைக்கு மீன்களை இறக்குமதி செய்வதனை நிறுத்தவேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வடமராட்சி வடக்கு வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சாமசத்தின் சமாச அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ்,

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ள அனைத்து சங்கங்களையும் இன்று நாம் அழைத்திருந்தோம். அதேவேளை சமாச பொதுச் சபை பிரதிநிதிகளையும் அழைத்திருந்தோம். அந்தவகையில் இன்று ஒன்றுகூடிய பிரதிநிதிகள் மத்தியிலே சீனாவில் இருந்து மீன் இறக்குமதி செய்வதனை உடன் நிறுத்துமாறு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எங்களது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தொடர்பில் இன்று ஆராயப்பட்ட நிலையில் வெளிநாட்டு மீன்களை எமது சந்தையில் விற்பனை செய்து எங்களுடைய சந்தையிலுள்ள மீன்களின் விற்பனைக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை கடற்றொழில் அமைச்சர்தான் வெளிநாட்டு மீன்களை இறக்குமதியை முன்னெடுப்பதாக கேள்விக்குறியாக இருக்கின்றது. எனவே இவ்வாறான மீன் இறக்குமதியை செய்யவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதனை உடன் நிறுத்துங்கள். கடற்றொழிலாளர் சமாசம் தீர்மானம்.samugammedia சீனாவில் இருந்து  இலங்கைக்கு மீன்களை இறக்குமதி செய்வதனை நிறுத்தவேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.வடமராட்சி வடக்கு வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சாமசத்தின் சமாச அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ்,வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ள அனைத்து சங்கங்களையும் இன்று நாம் அழைத்திருந்தோம். அதேவேளை சமாச பொதுச் சபை பிரதிநிதிகளையும் அழைத்திருந்தோம். அந்தவகையில் இன்று ஒன்றுகூடிய பிரதிநிதிகள் மத்தியிலே சீனாவில் இருந்து மீன் இறக்குமதி செய்வதனை உடன் நிறுத்துமாறு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எங்களது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தொடர்பில் இன்று ஆராயப்பட்ட நிலையில் வெளிநாட்டு மீன்களை எமது சந்தையில் விற்பனை செய்து எங்களுடைய சந்தையிலுள்ள மீன்களின் விற்பனைக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.அதேவேளை கடற்றொழில் அமைச்சர்தான் வெளிநாட்டு மீன்களை இறக்குமதியை முன்னெடுப்பதாக கேள்விக்குறியாக இருக்கின்றது. எனவே இவ்வாறான மீன் இறக்குமதியை செய்யவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement