• May 04 2024

புதிய கலப்பின கரும்பு வகைகள் மூலம் சீனி தயாரிப்பு..! இலங்கையில் நடைபெறும் ஆய்வுகள் samugammedia

Chithra / Nov 28th 2023, 12:41 pm
image

Advertisement

 

எதிர்காலத்தில் உள்ளூர் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆய்வுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கரும்பு செய்கை நிலத்தின் அளவை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீனி நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி கலும் பிரியங்கர தெரிவித்தார்.

செவனகல, பல்வத்த உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நான்கு சீனி தொழிற்சாலைகள் தற்போது நாட்டின் சீனி தேவையில் இருபது வீதத்தை மாத்திரமே உற்பத்தி செய்வதாகவும் மீதி எண்பது வீதம் வருடாந்தம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வருடாந்த சர்க்கரை உற்பத்தி 2.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன், 2019 ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் சீனி உற்பத்தியில் தொடர்ச்சியான உயர்விற்கான போக்கு காணப்பட்ட போதிலும், சீனி உற்பத்தியில் சில வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

புதிய கலப்பின கரும்பு வகைகள் மூலம் சீனி தயாரிப்பு. இலங்கையில் நடைபெறும் ஆய்வுகள் samugammedia  எதிர்காலத்தில் உள்ளூர் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆய்வுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.அத்துடன், கரும்பு செய்கை நிலத்தின் அளவை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீனி நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி கலும் பிரியங்கர தெரிவித்தார்.செவனகல, பல்வத்த உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நான்கு சீனி தொழிற்சாலைகள் தற்போது நாட்டின் சீனி தேவையில் இருபது வீதத்தை மாத்திரமே உற்பத்தி செய்வதாகவும் மீதி எண்பது வீதம் வருடாந்தம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வருடாந்த சர்க்கரை உற்பத்தி 2.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன், 2019 ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் சீனி உற்பத்தியில் தொடர்ச்சியான உயர்விற்கான போக்கு காணப்பட்ட போதிலும், சீனி உற்பத்தியில் சில வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement