• May 18 2024

எல்லைக்குள் வரும் சீன கப்பல்கள்- தைவான் எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Jun 27th 2023, 6:48 pm
image

Advertisement

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைப் பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு தங்களை சுதந்திர நாடாக அறிவித்து வருகிறது.

ஆனால் தைவானின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தைவான் கடல் ஜலசந்தியில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய செய்வதோடு பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.

இதனால் இந்த இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தீவு நாடான தைவானுக்கு அருகில் உள்ள 12-மைல் மண்டலம் என அழைக்கப்படும் பகுதிக்குள் நுழையும் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை தைவான் ஆயுதப்படை அழித்து ஒழிக்கும் என தைவான் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் லின் வென்ஹுவாங் எச்சரித்துள்ளார்.

இந்த 12-மைல் மண்டலம் என்பது தைவானுக்கு சொந்தமான நீர் மற்றும் வான்பரப்பை உள்ளடக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைக்குள் வரும் சீன கப்பல்கள்- தைவான் எச்சரிக்கை samugammedia தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைப் பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது.தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு தங்களை சுதந்திர நாடாக அறிவித்து வருகிறது.ஆனால் தைவானின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தைவான் கடல் ஜலசந்தியில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய செய்வதோடு பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.இதனால் இந்த இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.தீவு நாடான தைவானுக்கு அருகில் உள்ள 12-மைல் மண்டலம் என அழைக்கப்படும் பகுதிக்குள் நுழையும் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை தைவான் ஆயுதப்படை அழித்து ஒழிக்கும் என தைவான் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் லின் வென்ஹுவாங் எச்சரித்துள்ளார்.இந்த 12-மைல் மண்டலம் என்பது தைவானுக்கு சொந்தமான நீர் மற்றும் வான்பரப்பை உள்ளடக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement