திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பின்தங்கிய 5 தமிழ் பாடசாலைகளை குறிக்கோளாய் வைத்து அம்மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மகிழ்வோம் மகிழ்விப்போம் எனும் தொணிப் பொருளைக் கொண்ட வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் திங்கட்கிழமை மாலை பூநகர் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வெருகல் பிரதேச பல்கலைகழக மாணவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
05 வருட திட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வை ஸ்ப்பெயின் நாட்டில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரும், இவ் வேலைத்திட்டத்தின் உறுதுணையாக இருந்த நேதாஜியின் தாயார் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
இதன்பின்னர் அதிதிகளால் மங்கள விளக்கேற்றி நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் ஈச்சிலம்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள்,துறைசார் உத்தியோகத்தர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பூநகர் பிரதேச சமூக மட்டத் தலைவர்கள், பொதுமக்கள்,பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புலம்பெயர் தமிழரின் கல்வித் திட்டம் - சாதனையாளர்கள் கௌரவிப்பு samugammedia திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பின்தங்கிய 5 தமிழ் பாடசாலைகளை குறிக்கோளாய் வைத்து அம்மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மகிழ்வோம் மகிழ்விப்போம் எனும் தொணிப் பொருளைக் கொண்ட வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் திங்கட்கிழமை மாலை பூநகர் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.வெருகல் பிரதேச பல்கலைகழக மாணவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.05 வருட திட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வை ஸ்ப்பெயின் நாட்டில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரும், இவ் வேலைத்திட்டத்தின் உறுதுணையாக இருந்த நேதாஜியின் தாயார் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.இதன்பின்னர் அதிதிகளால் மங்கள விளக்கேற்றி நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் ஈச்சிலம்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள்,துறைசார் உத்தியோகத்தர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பூநகர் பிரதேச சமூக மட்டத் தலைவர்கள், பொதுமக்கள்,பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.