• May 18 2024

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் – கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை!

Chithra / Jan 31st 2023, 9:53 am
image

Advertisement

இலங்கை அதிகாரிகள் மீது கனடாவின் பொருளாதாரத் தடைகளை பாராட்டியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நியூரம்பெர்க் போன்ற புதிய நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரவும் அழைப்பு விடுப்பதாக உலகத் தமிழ் அமைப்புகளின் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வேல் வேலாயுதபிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு உயர்மட்ட அதிகாரிகள் மீது கனடா இந்த மாத தொடக்கத்தில் தடைகளை அறிவித்திருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கையை கனடா நிறுத்த வேண்டும் என சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியிடம் தமது தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்ததாக வேலாயுதபிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையின் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா முன்னர் அனுமதி அளித்துள்ளது, ஆனால் ராஜபக்ஷ சகோதரர்களை தடை பட்டியலிட்ட ஒரே நாடு கனடா என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் – கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை இலங்கை அதிகாரிகள் மீது கனடாவின் பொருளாதாரத் தடைகளை பாராட்டியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நியூரம்பெர்க் போன்ற புதிய நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரவும் அழைப்பு விடுப்பதாக உலகத் தமிழ் அமைப்புகளின் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வேல் வேலாயுதபிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு உயர்மட்ட அதிகாரிகள் மீது கனடா இந்த மாத தொடக்கத்தில் தடைகளை அறிவித்திருந்தது.சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கையை கனடா நிறுத்த வேண்டும் என சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியிடம் தமது தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்ததாக வேலாயுதபிள்ளை கூறியுள்ளார்.இலங்கையின் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா முன்னர் அனுமதி அளித்துள்ளது, ஆனால் ராஜபக்ஷ சகோதரர்களை தடை பட்டியலிட்ட ஒரே நாடு கனடா என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement