மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன் 100க்கும் மேற்பட்டோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டமையால் நேற்றிரவு அங்கு ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ பகுதியில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச மக்கள் மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கையில்,
மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அவர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகளை ஒரு குழு தடுத்தனர்.
மேலும், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை தொடர்பாக கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக மொரட்டுவ பொலிஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
இருப்பினும், கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மொரட்டுவை பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகைதந்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அருட்தந்தை சிரில் காமினி உட்பட பல பாதிரியார்களும் அங்கு வருகைதந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன் ஏற்பட்ட பதற்ற நிலை மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன் 100க்கும் மேற்பட்டோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டமையால் நேற்றிரவு அங்கு ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மொரட்டுவ பகுதியில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச மக்கள் மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கையில்,மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.இதன் விளைவாக, அவர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகளை ஒரு குழு தடுத்தனர்.மேலும், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை தொடர்பாக கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக மொரட்டுவ பொலிஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.இருப்பினும், கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மொரட்டுவை பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகைதந்துள்ளனர்.நிலைமையைக் கட்டுப்படுத்த அருட்தந்தை சிரில் காமினி உட்பட பல பாதிரியார்களும் அங்கு வருகைதந்துள்ளனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.