• May 18 2024

பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கண்டனம் samugammedia

Chithra / Aug 25th 2023, 5:56 pm
image

Advertisement

பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தலுக்கு நடவடிக்கையை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

குறித்த கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்களக்காடையர்களும் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

22/08/2023 அன்று மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பௌத்த பிக்கு உள்ளிட்ட காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதை அடக்க உதவிக்கு அழைக்கப்பட்ட போலீசாரும் வந்து, நடந்தேறிய காடைத்தனத்தின் காரணகர்த்தாவான பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்கின்றனர். 

இப்படியான பண்புகள், கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தொடரான இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையும் உருவாக்கி வருகின்றது. காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமா?

இந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து எமது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டு நிற்கிறோம். என்றுள்ளது.


பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கண்டனம் samugammedia பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தலுக்கு நடவடிக்கையை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.குறித்த கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்களக்காடையர்களும் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். 22/08/2023 அன்று மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பௌத்த பிக்கு உள்ளிட்ட காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.அதை அடக்க உதவிக்கு அழைக்கப்பட்ட போலீசாரும் வந்து, நடந்தேறிய காடைத்தனத்தின் காரணகர்த்தாவான பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்கின்றனர். இப்படியான பண்புகள், கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தொடரான இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையும் உருவாக்கி வருகின்றது. காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமாஇந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து எமது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டு நிற்கிறோம். என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement