• Jun 17 2024

அதிர்ச்சியில் உறைந்த அரச ஊழியர்கள்-செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அதிரடி அறிவிப்பு.!

Sharmi / Jan 31st 2023, 11:16 am
image

Advertisement

ஒவ்வொரு அரச நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேவைக்கு மேலதிகமாக உள்ளவர்களுக்கு சுய ஓய்வு பெறும் முறையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமுறையானது திறைசேரியால் அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை அமைச்சுக்களின் செயலாளர்களும் கையெழுத்திட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு அமைச்சகத்தின் செலவினங்களைக் குறைக்க சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் உதாரணமாக ரயில்வேக்கு 3,000 பொது ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள்.

அந்த ஊழியர்களில் ஒரு தொழிலாளி கூட புதிதாக பொதுப்பணிக்கு நியமிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கல்வித்துறையில் 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளார்கள் என தான் நினைப்பதாக குறிப்பிட்ட அவர் அதிகமான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக தமது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சுய ஓய்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களை அனுப்பும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த அரச ஊழியர்கள்-செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அதிரடி அறிவிப்பு. ஒவ்வொரு அரச நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அத்துடன் சேவைக்கு மேலதிகமாக உள்ளவர்களுக்கு சுய ஓய்வு பெறும் முறையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடைமுறையானது திறைசேரியால் அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை அமைச்சுக்களின் செயலாளர்களும் கையெழுத்திட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு அமைச்சகத்தின் செலவினங்களைக் குறைக்க சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் உதாரணமாக ரயில்வேக்கு 3,000 பொது ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள்.அந்த ஊழியர்களில் ஒரு தொழிலாளி கூட புதிதாக பொதுப்பணிக்கு நியமிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.கல்வித்துறையில் 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளார்கள் என தான் நினைப்பதாக குறிப்பிட்ட அவர் அதிகமான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டார். குறிப்பாக தமது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சுய ஓய்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களை அனுப்பும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement