• May 18 2024

ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் நிலை தொடர்பில் அமைச்சர் நஸீர் அஹமட் ஆலோசனை!

Sharmi / Jan 31st 2023, 11:26 am
image

Advertisement

இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் இரண்டாம் காலாண்டில் 50 சதவீதமாக நிறைவு செய்யப்படவேண்டுமென சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுற்றாடல் துறை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு அலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் தமது செயற்திட்டங்கள் தொடர்பில் தமது பொறுப்பையும் திறமையான சேவையையும் அதிகப்படுத்த வேண்டும் என்றும்,
இந்த வருட இறுதி முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தெரிவித்த அமைச்சர் அதிகபட்ச பலன்களை எதிர்பார்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதிகாரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் நிலை தொடர்பில் அமைச்சர் நஸீர் அஹமட் ஆலோசனை இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் இரண்டாம் காலாண்டில் 50 சதவீதமாக நிறைவு செய்யப்படவேண்டுமென சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.சுற்றாடல் துறை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு அலோசனை வழங்கியுள்ளார்.அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் தமது செயற்திட்டங்கள் தொடர்பில் தமது பொறுப்பையும் திறமையான சேவையையும் அதிகப்படுத்த வேண்டும் என்றும்,இந்த வருட இறுதி முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தெரிவித்த அமைச்சர் அதிகபட்ச பலன்களை எதிர்பார்பதாக குறிப்பிட்டிருந்தார்.இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதிகாரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement