• May 18 2024

கனேடிய நபருக்கு அடுத்தடுத்து கிடைத்த அதிர்ஷ்டம்! SamugamMedia

Chithra / Mar 15th 2023, 4:24 pm
image

Advertisement

கனடாவின் ஒன்றாரியோ மாகாண மேபெல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓராண்டு கால இடைவெளியில் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டு பரிசுகளை வென்றுள்ளார்.

மேபெல் பகுதியைச் சேர்ந்த கிளென் ஹாப்பர் என்ற நபரே இவ்வாறு இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.

469028 டாலர்களை குறித்த நபர் பரிசாக வென்றெடுத்துள்ளார்.

மோட்டார் தொழில்நுட்ப பணியாளரான ஹாப்பர் கடந்த ஆண்டு ஒரு லட்சம் டாலர் பரிசு வென்றுள்ளார்.

பரிசுத் தொகையை பார்த்தபோது தாம் நான்காயிரம் டாலர்கள் பரிசு வென்றுள்ளதாகவே கருதியதாகவும் பின்னர் சரியாக பார்த்தபோது நான்கு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் டாலர்கள் பரிசு வென்றது தெரியவந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுக்க கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசுத் தொகையைக் கொண்டு தாம் ஓய்வூதத்திற்கான சேமிப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஃப்ளோரிடா மற்றும் நியூ பவுண்ட்லேண்ட் ஆகிய பகுதிகளுக்கு விடுமுறையை கழிப்பதற்காக பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


கனேடிய நபருக்கு அடுத்தடுத்து கிடைத்த அதிர்ஷ்டம் SamugamMedia கனடாவின் ஒன்றாரியோ மாகாண மேபெல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓராண்டு கால இடைவெளியில் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டு பரிசுகளை வென்றுள்ளார்.மேபெல் பகுதியைச் சேர்ந்த கிளென் ஹாப்பர் என்ற நபரே இவ்வாறு இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.469028 டாலர்களை குறித்த நபர் பரிசாக வென்றெடுத்துள்ளார்.மோட்டார் தொழில்நுட்ப பணியாளரான ஹாப்பர் கடந்த ஆண்டு ஒரு லட்சம் டாலர் பரிசு வென்றுள்ளார்.பரிசுத் தொகையை பார்த்தபோது தாம் நான்காயிரம் டாலர்கள் பரிசு வென்றுள்ளதாகவே கருதியதாகவும் பின்னர் சரியாக பார்த்தபோது நான்கு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் டாலர்கள் பரிசு வென்றது தெரியவந்தது என குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுக்க கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பரிசுத் தொகையைக் கொண்டு தாம் ஓய்வூதத்திற்கான சேமிப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும், ஃப்ளோரிடா மற்றும் நியூ பவுண்ட்லேண்ட் ஆகிய பகுதிகளுக்கு விடுமுறையை கழிப்பதற்காக பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement