• May 06 2024

வீட்டை உடைத்து தொலைக்காட்சியும், பணமும் கொள்ளை! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 6:53 pm
image

Advertisement

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு தொலைக்காட்சியும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சியும், 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது என வீட்டு உரிமையாளர் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கடந்த (5) ஆம் திகதி தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்கு சென்று மீண்டும்  நேற்று (8) திகதி மாலை வீட்டுக்கு வந்த வேளையில்  தனது வீட்டின் ஜன்னல் உடைக்கப்  பட்டிருப்பதை கண்டு உள்ளே சென்று பார்வை இட்ட போது பெருமதிமிக்க தொலைக்காட்சி பெட்டி மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்க பட்டிருந்ததாகவும், அதனை தொடர்ந்து மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகையில் சம்பந்தப்பட்ட இல்லத்தின் யன்னல் பகுதி உடைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் இது வரை எவரும் கைது செய்ய வில்லை என அவர் கூறினார்.


வீட்டை உடைத்து தொலைக்காட்சியும், பணமும் கொள்ளை samugammedia மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு தொலைக்காட்சியும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சியும், 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது என வீட்டு உரிமையாளர் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.கடந்த (5) ஆம் திகதி தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்கு சென்று மீண்டும்  நேற்று (8) திகதி மாலை வீட்டுக்கு வந்த வேளையில்  தனது வீட்டின் ஜன்னல் உடைக்கப்  பட்டிருப்பதை கண்டு உள்ளே சென்று பார்வை இட்ட போது பெருமதிமிக்க தொலைக்காட்சி பெட்டி மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்க பட்டிருந்ததாகவும், அதனை தொடர்ந்து மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகையில் சம்பந்தப்பட்ட இல்லத்தின் யன்னல் பகுதி உடைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் இது வரை எவரும் கைது செய்ய வில்லை என அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement