• May 11 2024

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை! samugammedia

Chithra / Nov 2nd 2023, 1:43 pm
image

Advertisement

 

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக இல்லை. 

சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த முன்பள்ளி நிர்வாகங்கள் சிறிதளவு ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகின்றன. 


சில ஆசிரியர்களுக்கு கல்வி தினைக்களம் 6000 ரூபாய் ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த ஆசிரியர்கள் சிறப்பான கல்வி வழங்குவதிலும் தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வதிலும் நீண்டகாலமாக பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். 

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் காலத்தில் இப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்குவதாக அரசியல் பிரமுகர்கள் கூறுவார்கள் ஆனால் தேர்தல்கள் முடிந்த பின்னர் அதனை அவர்கள் நிறைவேற்றுவதில்லை.

எனவே அரசாங்கம், முன்பள்ளி ஆசிரியர்களின் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை samugammedia  முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக இல்லை. சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த முன்பள்ளி நிர்வாகங்கள் சிறிதளவு ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகின்றன. சில ஆசிரியர்களுக்கு கல்வி தினைக்களம் 6000 ரூபாய் ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது.இவ்வாறான சூழ்நிலையில் குறித்த ஆசிரியர்கள் சிறப்பான கல்வி வழங்குவதிலும் தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வதிலும் நீண்டகாலமாக பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் காலத்தில் இப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்குவதாக அரசியல் பிரமுகர்கள் கூறுவார்கள் ஆனால் தேர்தல்கள் முடிந்த பின்னர் அதனை அவர்கள் நிறைவேற்றுவதில்லை.எனவே அரசாங்கம், முன்பள்ளி ஆசிரியர்களின் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement