• May 18 2024

தேர்தல் சட்டபூர்வமானது என்பது குறித்து கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை! – அனுர SamugamMedia

Chithra / Feb 25th 2023, 11:53 am
image

Advertisement

தேர்தலை பிரகடனப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்றும் அவை அனைத்தும் நீதிமன்றத்தால் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சட்டரீதியாக செயற்படாவிட்டால் ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தேர்தல் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலுக்கான திகதியை அறிவித்து, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தபால் மூல வாக்களிப்பிற்கான திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி கூறுவது அப்பட்டமான பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்திருந்தால்,தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகவே ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் நகர்வுகளை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.


தேர்தல் சட்டபூர்வமானது என்பது குறித்து கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை – அனுர SamugamMedia தேர்தலை பிரகடனப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்றும் அவை அனைத்தும் நீதிமன்றத்தால் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு சட்டரீதியாக செயற்படாவிட்டால் ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தேர்தல் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.தேர்தலுக்கான திகதியை அறிவித்து, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தபால் மூல வாக்களிப்பிற்கான திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி கூறுவது அப்பட்டமான பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்திருந்தால்,தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஆகவே ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் நகர்வுகளை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement